Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

போட்டிகளில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு தடைவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான உடல்தகுதி இல்லை எனக் கூறி, வினேஷ் போகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

கடந்த ஜூலை மாதம் குழந்தை பெற்றெடுத்த வினேஷ் போகத், உடல்தகுதி விதிமுறைகளின் கீழ் வரவில்லை என கூட்டமைப்பு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதியற்றவர் என அறிவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாய்மை என்பது கொண்டாடப்பட வேண்டியது; அதை பழிவாங்கும் மனப்பான்மையுடன் அணுகக்கூடாது என நீதிபதிகள் தேவேந்திர குமார் உபாத்யாயா  மற்றும் தேஜஸ் காரியாஅடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் வினேஷ் போகத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவரது உடல்தகுதியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  CSK- உர்வில் படேலின் காட்டடி… 13 பந்துகளில் 50 ரன்கள்..! லைவ்வில் பார்த்து மிரண்ட கோலி..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago