திருப்பத்தூர், உடையாமுத்தூர் அருகிலுள்ள சமத்துவபுரப் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (66). இவர் தன்னை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு அரசு அலுவலகமாக சுற்றி திரியும் இவருக்கு பேரன், பேத்திகள் உள்ளனர்.
இவருடைய மகன் சிங்காரவேலன் என்பவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் சிங்காரவேலன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் கணவன் இறந்த பிறகு 3 பிள்ளைகளுடன் மாமனார் ஆனந்தராஜ் வீட்டிலே வசித்து வந்துள்ளார்.
மகன் இறந்த பிறகு மருமகள் மீது மாமனாருக்கு (66 க்கு 26 ) மோகம் ஏற்பட்டுள்ளது. அதனால் உனக்கு நான் எப்படியாவது அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி தகாத உறவில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாமனார் மூலம் கர்ப்பமடைந்தது வெளி உலகிற்கு தெரியவர, பதறிப்போன மருமகள், மாமனாரிடம் சண்டையிட்டுள்ளார். செய்வதறியாமல் திகைத்த மாமனார் ஆனந்தராஜ் மருமகளிடம் கெஞ்சி கூத்தாடி என்னை காட்டி கொடுத்து விடாதே, அக்கம்பக்கத்தில் கேட்டால் வேறு யார் மீதாவது சொல்லி விடுமாறு கூறி இருக்கிறார். இதனால் மருமகள் மாமனாரை காட்டி கொடுக்காமல் இருந்துள்ளார்.

கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் விசாரிக்க தொடங்கிய நிலையில். எனக்கே தெரியவில்லை. யாரோ என்னை கெடுப்பது போல கனவு வந்தது, ஆனால் எனக்கு சுய நினைவு இல்லை என பல காரணங்களை கூறி சமாளித்து வந்துள்ளார்.
ஆனால், விவகாரம் பெரிதாகி போனதால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
நடத்தப்பட்ட விசாரணையில் என்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் என் மாமனார் தான். என்னை ஆசை வார்த்தை கூறி என்னிடம் பல முறை உறவு வைத்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசை வார்த்தை கூறி மிரட்டி ஒரு மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் ஆனந்தராஜை கைது செய்து வேலூர் மத்திய சிறையிலைடைத்தனர்.
