Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னை தலைமைச் செயலகம் முன்பு, நீட் (NEET) தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ராப் பாடகர் தெருக்குரல் அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தலைமைச் செயலகத்தின் அதிஉயர் பாதுகாப்பு வளாக நுழைவாயில் பகுதியில் அனுமதியின்றி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அறிவு உட்பட நான்கு பேரைக் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினர் அவரை ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர், சட்ட நடைமுறைகளின்படி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Republic Tamil

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அறிவுவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது அரசு அலுவலக அறையில் (Chamber) தெருக்குரல் அறிவுவை நேரில் சந்தித்து, நீட் தேர்வு தொடர்பான கோரிக்கைகள், மாணவர்களின் நிலை, தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  நடிகை தீபாவின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! டீக்கடையில் வைத்து வெட்டிய மர்ம நபர்கள்!

சந்திப்பின்போது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டம், டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதி நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக வெளியான தகவல்களுக்கும், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) நடத்திய பேரணியில் மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாக வெளியான தகவல்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய தெருக்குரல் அறிவு, “மாணவர்களை அடிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டு முதலமைச்சரைச் சந்திக்க உள்ளே சென்றார்.

முதலமைச்சருடனான சந்திப்பில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் குறித்து தனது கருத்துகளை அறிவு எடுத்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  விஜய்க்கே அல்வா..! செந்தில் பாலாஜி-யை மறைத்து பாதுகாக்கும் தவெக விஐபி-யின் பி.ஏ..! படுபயங்கர ட்விஸ்ட்..!

Republic Tamil

சந்திப்பு நிறைவடைந்த பிறகு, அங்கிருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தெருக்குரல் அறிவுவை அன்புடன் சந்தித்து, தலைமைச் செயலகத்தின் வெளிவாசல் வரை நேரில் வந்து முறைப்படி வழியனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியின் கொடிப் பாடலை எழுதி, இசையமைத்து பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘வாத்தி ரைடு’ மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ‘தளபதி கச்சேரி’ உள்ளிட்ட பாடல்களையும் எழுதியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago