Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை தொடங்கி வைக்கவே முடியாத முதலமைச்சர் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையும் பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியிலிருந்து மூதாட்டிகள் வரை நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தவெக அரசின் கையாளாக தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முக்கியமானதாகக் கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை தொடங்கி வைக்கவே முடியாத நிலையில், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்புதான் இந்த நிகழ்வு நடைபெறும் என கூறப்படும் தகவல் உண்மை என்றால், தமிழகத்தில் அரசு எதற்கு என்பதையும் அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  மாறுவோம்! மாற்றுவோம்! – சினிமாவும், வாரிசும் இல்லாத அண்ணாமலையின் தகுதி அடிப்படையிலான அரசியல் புரட்சி!

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago