Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rowdy David

சேலம் மாநகரம் சூரமங்கலம் அருகே ரெட்டிபட்டி – இரும்பாலை புதுரோடு பகுதியில் பிரபல ரவுடி டேவிட் என்பவனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்று பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன? – நிமிடத்திற்கு நிமிடம்
சேலம் மாநகரம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவன் “டேவிட் (எ) உதயகுமார்” இன்று காலை சுமார் 11 மணியளவில் அவன் நண்பர் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி இரும்பாலை சாலை புதுரோடு அருகே சென்று கொண்டிருந்தான்

அப்போது அவனை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென அவனை பின்புறமாக வெட்டியுள்ளது. நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்த டேவிட், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடியுள்ளான் ஆனால் விடாமல் துரத்திச் சென்ற அந்தக் கும்பல், அவனை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதையும் படியுங்க  பதவி ஆசை காட்டி படுக்கைக்கு அழைப்பு! த.வெ.க-வை உலுக்கும் 15 பாலியல் புகார்கள்!

தகவலறிந்து விரைந்த போலீசார், ரவுடி டேவிட் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து சூரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


யார் இந்த டேவிட்? – ரவுடி பின்னணியின் இருண்ட பக்கங்கள்
போலீஸ் தரப்பு மற்றும் உள்ளூர் தகவல்களின்படி டேவிட்டின் பின்னணி சாதாரணமானதல்ல: என்கின்றனர்

ரியல் எஸ்டேட் முகமூடியில் ரவுடியிசம்:

டேவிட் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் நில விவகாரங்களில் அவன் மீது தொடர் சர்ச்சைகள் இருந்துள்ளன. ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் இவனுக்குத் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறது போலீஸ் தரப்பு., கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 65 லட்சம் ரூபாய் நில மோசடி செய்ததாக டேவிட் மீது சேலம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவனது கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். , இந்த மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்று வெளியில் இருந்து வந்த நிலையில்தான் இன்று அவன் கொலை செய்யப்பட்டுள்ளார்

இதையும் படியுங்க  "அம்பேத்கர் சிலை வடிவம் தான் காரணமா? சேலத்தில் நள்ளிரவில் வெடித்த மோதல்.. கலவர பூமியான கிராமம்!"

கொலைக்குப் பின்னால் என்ன?
பட்டப்பகலில், பொது சாலையில், திட்டமிட்டு பின்தொடர்ந்து நடத்தப்பட்ட இந்தக் கொலை, சாதாரண மோதல் அல்ல என்பதை உணர்த்துகிறது.

போலீசார் முன்வைக்கும் முக்கிய கோணங்கள்: – 65 லட்சம் நில மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பழிவாங்கும் நடவடிக்கையா? கூட்டாளிகள் கைதானதன் பின்னணியில் ஏற்பட்ட உள்குத்தா? ஏற்கனவே உள்ள கொலை வழக்கின் எதிர்தரப்பினரின் கைவரிசையா? சேலம் சூரமங்கலம் – அம்மாபாளையம் பகுதியில் நில ஆதிக்கத்திற்காக நடக்கும் கும்பல் மோதலின் தொடர்ச்சியா? 5 பேர் கொண்ட கும்பல், முகத்தை மறைக்காமல், தப்பிக்கும் வழியை முன்கூட்டியே திட்டமிட்டு வந்திருப்பது, இது தொழில்முறை கூலிப்படையின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் விசாரித்து வருவதாக கூறுகின்றார்கள் ,

அடுத்தது என்ன? சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். டேவிட்டின் செல்போன் அழைப்புகள், சமீபத்திய நில பரிவர்த்தனைகள், மோசடி வழக்கில் தொடர்புடையவர்களின் நடமாட்டம் ஆகியவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  Its construction was made from solid metal bars

பட்டப்பகலில் நடந்த இந்த வெட்டுக்கொலை சேலம் மாநகரில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 hours ago at 7 hours ago