தவெக அரசு நிர்வாக ரீதியாக செய்திருக்கக்கூடிய ஒரு பெரிய குளறுபடி மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 21, 2026 அன்று சத்தமில்லாமல் போட்ட ஒரு அரசாணை.
இதனால் எழுந்த எதிர்ப்புகளின் அழுத்தம் தாங்க முடியாமல் நேற்று முன்தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 27ஆம் தேதி மாலை அவசர அவசரமாக அது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் எதிர்கட்சிகளும், நடுநிலையாளர்களும் இதை அரசின் நிர்வாக தடுமாற்றம், அவசர போக்கு என கடுமையான விமர்சனங்களை
வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆளுங்கட்சி தரப்பு இது மக்களோட குரலுக்கு மதிப்பளிக்கிற உண்மையான ஜனநாயகப் போக்கு என வாதாடுகிறார்கள்.
இந்த விஷயத்துக்கு செல்வதற்கு முன் எல்லாருக்கும் புரிகிற வகையில் ஒரு சின்ன சட்ட பின்னணியை பார்க்கலாம். நம் நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் அதாவது ஆர்டிஐ சட்டம் இருக்கிறது. அதில் செக்சன் 24 சப்செஷன் 4 என ஒரு பிரிவு இருக்கிறது. இந்த பிரிவோட வேலை என்னவென்றால் ஒரு மாநில அரசு நினைத்தால் ஒரு சில குறிப்பிட்ட துறைகளை அந்த ஆர்டிஐ வரம்புக்குள் இருந்து வெளிய எடுத்து விடலாம்.
அதாவது இந்த விஷயத்தை நாங்கள் பொதுமக்கள் கேட்டாலும் தரமாட்டோம். இது ரகசியம் என மறுப்பதற்கு இந்த
சட்டப்பிரிவு அரசுக்கு அதிகாரம் கொடுக்கிறது. இதற்கு முன் வரைக்கும் உளவுத்துறை அதாவது இன்டெலிஜன்ஸ் ரிப்போர்ட், அப்புறம் சிபிசிஐடி விசாரணை, பை ஏஜென்சி மாதிரியான மாநில பாதுகாப்பு சார்ந்த துறைகளுக்கு மட்டும்தான் இந்த விலக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அது நியாயமானதும் கூட. ஏனென்றால் ஒரு சர்வதேச கடத்தல்காரனையோ அல்லது தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருத்தரையோ சிபிசிஐடி ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களது டேட்டா, அவர்களது அடுத்த கட்ட மூவ் என்ன? அவற்களை எப்போது கைது செய்யப் போகிறார்கள் என்கிற இந்த உளவுத்துறை தகவல்கள் எல்லாம் ஒருவரது ஆர்டிஐயில் கேட்டு அது வெளியில் கசிந்தால் குற்றவாளிகள் உஷாராகி தப்பி விடுவார்கள். அதே மாதிரி அண்டை மாநில எல்லைகளிலோ, அல்லது கடலோர பகுதிகளில் மாநில பாதுகாப்புக்காக போடப்பட்டு இருக்கிற ரகசிய பாதுகாப்பு திட்டங்களை ஆர்டிஐயில் கேட்ட உடனே பொதுவெளியில் கொடுத்து விட்டால் அது ஒட்டுமொத்த மாநிலத்தோட பாதுகாப்புக்கே சட்டம் ஒழுங்குக்கே ஒரு மிகப்பெரிய
அச்சுறுத்தலாக மாறிவிடும். அதனால்தான் தேச பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்காக இந்த விலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது 100% நியாயமானதுதான்.
ஆனால் தவெக அரசு போட்ட இந்த புது அரசாணைதான் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த
அரசாணை மட்டும் ரத்தாகாமல் அமலுக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? இனிமேல் உங்களோட பக்கத்து தெருவிலோ அல்லது போலீஸ் ஸ்டேஷனிலோ யாராவது இறந்து போய் விட்டாலோ அல்லது சாதி ரீதியாக எங்கேயாவது ஒரு கலவரம் உண்டாணாலோ அந்த அடிப்படை தகவலை கூட இனிமேல் நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக ஆர்டிஐ ஆக்ட் மூலம் கேட்டு வாங்க முடியாது.
பிராக்டிகலாக யோசித்து பாருங்கள். ஒரு சாதி கலவரங்கள் பற்றிய ஒரு தகவலை நம்மால் வாங்க முடியாது. மாணவர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டத்தை பற்றிய தகவல்களை நம்மால் வாங்க முடியாது. காவல் நிலையத்தில ஏதாவது ஒரு லாக்கப் மரணம் அல்லது காவல் துறையினரால் ஏதாவது ஒரு மரணம் நடந்துவிட்டது என்றால் அதை பற்றிய தகவல்களை வாங்க முடியாது.

கோர்ட்டில் ரிமாண்ட் எடுக்கிறபோது அந்த கைதிக்கு ஏதாவது டார்ச்சர் நடந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தால் அதை பற்றிய உண்மை நிலவரத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது. அதே போல காவல் அதிகாரிகள் யாராவது ஒருவரை என்கவுண்டர் செய்து விட்டால் அந்த என்கவுண்டர் டீடெயில்ஸ் மக்களால் இனி வாங்கவே முடியாது. இதைவிட ஒரு பெரிய முரண்பாடு என்னவென்றால் தேர்தல் மேடைகளில் ஊழலற்ற தூய்மையான ஆட்சி என வாக்குறுதி கொடுத்த இந்த தவெக அரசு சட்டம்- ஒழுங்கு துறையை மொத்தமாக ஆர்டிஐ வரம்பை விட்டு வெளியில் தூக்கியதுதான்.
இப்ப சட்டப்படி பார்த்தால் எந்த துறைக்கு விலக்கு கொடுத்தாலும் ஊழல் குற்றுச்சாட்டுகளை மனித உரிமை மீரல்களையும் ஆர்டிஐயில் இருந்து மறைக்க முடியாது என சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் சட்டம் – ஒழுங்கு துறையே ஒரு இருட்டறை மாதிரி ரகசிய துறையாக மாற்றி வைத்து விட்டால்
உள்ளே எந்த ஃபைல்ஸ் ஊழல் நடக்கிறது? எங்கே மனித உரிமை மீறப்படுகிறது என வெளியிலேயே தெரியாமல் போய்விடும்.
உள்ள என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு சாதாரண குடிமகன் எப்படி ஆதாரங்களோடு தகவல்களை கேட்க முடியும்? அதே போல மனித உரிமை மீரல் நடந்தால் பழைய விதிப்படி தகவல் ஆணயத்தின் அனுமதி பெற்று 45 நாட்களுக்குள்ள தகவல் தர வேண்டும். ஆனால் நடைமுறையில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் ஒருவர் லாக்கப் மரணத்தில் இறந்தார் என்றால் அந்த சம்பந்தப்பட்ட குடும்பம் கோர்ட்டுக்கும் தகவல் ஆணயத்துக்கும் அலைந்து அனுமதி பெற்று 45 நாள் காத்துக்கொண்டு இருக்க முடியுமா? அதற்குள் ஆதாரங்களை எல்லாம் அழித்து விட மாட்டார்களா? அதனால்தான் அறப்போர் இயக்கம் மாதிரியான சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும் ஏன் இந்த அரசோட கூட்டணி கட்சிகளுமே கொதித்து போய் இது வெளிப்படை தன்மைக்கு எதிரானது என அழுத்தம் கொடுத்தார்கள்.

ஒரு அரசாங்கம் ஒரு கொள்கை முடிவு எடுக்கிறது, அரசாணை வெளியிடுகிறது என்றால் அதற்கென ஒரு நிர்வாக வழிமுறை இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசுவார்கள். சட்டத்துறைக்கு அனுப்பி லீகல் வெட்டிங் செய்வார்கள். பிறகு அமைச்சர், முதல்வர் கையெழுத்து போட்டு அது அரசாணையாக வெளியில் வரும். ஆனால் இந்த அரசாணை செப்டம்பர் 21ஆம் தேதியே பாஸ் பண்ணி விட்டார்கள். ஆனால் மக்களுக்கு சொல்லாமல் பப்ளிக் ஃபார்ம்க்கு கொண்டு வராமல் ரகசியமாக வைத்து விட்டு செப்டம்பர் 27ஆம் தேதி தான் இது வெளிச்சத்துக்கே வருகிறது.
சரி இப்படி அவசரப்பட்டு அரசாணை போட்டுவிட்டு பிறகு வாபஸ் வாங்குவது இந்த அரசுக்கு இதுதான் முதல் முறையா? என்றால் இல்லை. இதற்கு முன் இந்த அரசு இதே மாதிரியான சில நிர்வாக தடுமாற்றங்கள், முன்னுக்கு பின் முரணான உத்தரவுகள் நடந்திருக்கிறது. அதற்கு ஒரு சில உதாரணங்கள். இது அரசாணை கிடையாது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 9, 2026 அன்று அரசு ஒரு அதிரடி உத்தரவு போட்டது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 52 முக்கிய கோவில்களுக்குள் ஸ்மார்ட்போன்களை கொண்டு போக செப்டம்பர் 1, 2026 முதல் முழுமையான தடை விதிக்கப்படும் என்றார்கள் சொன்னபடியே செப்டம்பர் 1 ஆம் தேதி தடையும் வந்தது. ஆனால் நடைமுறையில்பொதுமக்கள் மத்தியில் எழுந்த பயங்கரமான எதிர்ப்பை பார்த்துவிட்டு தடைவிதித்த அதே செப்டம்பர் ஒன்றாம் தேதி மாலை தனது உத்தரவை மாற்றி தளர்வு அறிவித்தார்கள்.
இதே செப்டம்பர் மாதத் தொடக்கத்தில மாணவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த கல்லூரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்கிற தொணியில் ஒரு சுற்றறிக்கை வெளியானது. மாணவர் அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உடனே அரசு தரப்பில் இருந்து இது அதிகாரப்பூர்வமான அரசாணை கிடையாது. வெறும் ஆலோசனை வரைவுதான் எனச் சொல்லி அந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற்றார்கள். இதே மாதிரிதான் அரசு மருத்துவமனைகளில் சில சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த போகிறோம் எனச் சொல்லி ஒரு ஆரம்ப கட்ட வரைவு அறிக்கை வெளியில் கசிந்தது.

சோசியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பிய உடன் ”நாங்க இன்னும் எந்த முடிவுமே அது சம்பந்தமா எடுக்கல. இது வெறும் வரைவு ஆலோசனை மட்டும்தான்” எனச் சொல்லி அப்படியே அந்தத் திட்டத்தை கைவிட்டு பின்வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கிறபோது ஒரு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசிக்காமல் ஒரு தெளிவான தொலைநோக்கு திட்டம் இல்லாமல் அரசு தடுமாறுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது. ஆனால் நாணயத்துக்கு எப்போதுமே இரண்டு பக்கங்கள் உண்டு. அதில் நாம் ஒரு பக்கத்தை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது.
ஆகையால் இரண்டாவது பக்கத்தையும் பார்த்து விடுவோம். இரண்டாவது பக்கம் யார் என்றால் இந்த அரசுதான். அரசு தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு மற்றும் மிக முக்கியமான உளவு தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்கிற பாதுகாப்பு நோக்கத்தில தான் இந்த அரசாணை யோசிக்கப்பட்டது என்கிறார்கள். அதைவிட முக்கியமாக ஒரு அரசாங்கம் என்பது பிடிவாதமாக இருக்கக் கூடாது. மக்களுடைய உணர்வுகளுக்கும், எதிர்கட்சிகளுடைய நியாயமான விமர்சனங்களுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
தன்னுடைய முடிவில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை ஈகோ பார்க்காமல் உடனடியாக திருத்திக் கொள்வதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கிறார்கள். இதுவும் நாம் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல பண்புதான். அதே நேரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய சில மணி நேரங்களிலேயே மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அந்த அரசாணையை திரும்ப பெற்ற முதலமைச்சரின் ஜனநாயக போக்கும் பாராட்டுக்குரியதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒரு அரசாங்கம் தனது கொள்கை முடிவுகளை எடுக்கிபோது அவசர கோலத்தில் மக்களிடமும், சட்ட வல்லுனர்களிடமும் முன்கூட்டியே விரிவான ஆலோசனைகளை நடத்திவிட்டு அரசாணையை பிறப்பித்தால் இந்த அளவுக்கு விவாதங்களும், குழப்பங்களும் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்.

அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கிற நம்பகத்தன்மையும் இன்னும் வலுப்படும். மக்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறது? என்ன மாதிரியான சட்டங்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறது? என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டு? என்ன மாற்றங்கள் நடந்தால் அது அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என அனைத்தையும் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விட்டு இறுதியாக அதை நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் ஒரு அரசு சரியாகச் செய்யக்கூடிய விஷயமாக இருக்கும்.
இதில் இந்த அரசு அடிக்கடி தவறுகிறதோ என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது. இறுதியாக வைக்கிற கேள்வி இதுதான். இந்த அரசாணை விவகாரம் என்பது ஒரு புதிய அரசின் திட்டமிடல் இல்லாத அவசர போக்கா? அல்லது மக்களின் குரலுக்கு உடனடியாக செவிசாய்க்கிற ஒரு மிகச்சிறந்த ஜனநாயக பண்பா? இந்த முடிவை வாசகர்களாகிய உங்களது தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம்.
