Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சிவகங்கை மாவட்டம், பரமக்குடி அடுத்துள்ள சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் அமலாவெர்ஜினா (22) முத்து விஜயாபுரத்தை சேர்ந்த வியாகுல நவீன்(23) இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளனார், மற்றும் புனித சிலுவை கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். இருவரும் பேருந்தில் செல்லும் பொழுது நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

படிப்பு முடித்த பின்பு அமலாவெர்ஜினா ஒமேகா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக வியாகுல நவீனை சந்திப்பதில் அமலா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உன்னிடம் கார் இருக்கிறதா? இருசக்கர வாகனம் உள்ளதா? என்றெல்லாம் அவரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஐஜி பங்களா எதிரே நடை பாதையில் உள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்து பேசும் பொழுது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நவீன் அமலாவெர்ஜினாவை அவர் அணிந்து வந்த துப்பட்டாவை பிடித்து கழுத்தை நெரித்து உள்ளார். மயக்கம் அடைந்த அமலா கீழே விழுந்து கிடந்துள்ளார். மீண்டும் அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்த நவீன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் தலையிலும், முகத்திலும் கொடூரமாக தாக்க துவங்கியுள்ளார்.

இதையும் படியுங்க  "பாதுகாப்பு வளையத்தை உடைத்த நட்பு! நடுரோட்டில் கார் கண்ணாடியை இறக்கி CM விஜய் செய்த வைரல் செயல்!"

அப்பகுதியில் சென்ற பொது மக்கள் உடனடியாக அவரை பிடிக்க முற்பட்டுள்ளனர். இதில் அவன் தப்பித்து ஓட முயன்றால் பொதுமக்கள் சத்தம் கூடவே அருகில் ஐஜி பங்களாவில் காவல் பணியில் இருந்த காவல்துறையினரும் ஓடி வந்து நவீனை சுற்றி வளைத்து பிடித்தனர். அங்கிருந்த பொதுமக்கள் பெண்ணே தாக்கியதை கண்ட கோபத்தில் சரமாரியாக நவீன தாக்கினர். உடனடியாக காவல்துறையினர் அவர் மீட்டு கேகே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அமலாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நவீன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  "தவெக-வின் அசுர வெற்றிக்கு 'SIR' நீக்கம் தான் காரணமா? அதிரடிப் புள்ளிவிவரம்!"

பட்டப்பகலில் காதலித்த பெண்ணை காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற விஜய் அரசு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூறி சிங்கப்படை அமைப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் பொறுப்பேற்றிலிருந்து தமிழகத்தில் பாலியல், வீடு புகுந்து வாலிபர்கள் வெட்டிக்கொலை உள்ளிட்ட வன்கொடுமைகளும் பெண்கள் தாக்கப்படுவதும் தொடர் ககையாக மாறி வருகிறது.

-ஜான் கண்ணன், சிறப்பு நிருபர், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago