Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி (Special Representative of the Government of Tamil Nadu in New Delhi) என்ற பதவியை அவர் தற்காலிகமாக ஓராண்டு காலத்திற்கு வகிப்பார். இந்தப் பதவி அமைச்சரவை அந்தஸ்துக்கு (Cabinet Rank) இணையான உயர் அரசு பதவியாகும்.

டெல்லியில் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, தமிழகத்தின் கோரிக்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து முன்வைப்பதே இந்தப் பதவியின் முக்கிய பொறுப்பாகும்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான KVN Productions நிறுவனத்தின் நிறுவனர் ஆவார் கே. வெங்கட நாராயணா.

பட்டயக் கணக்காளர் (CA), நிறுவனச் செயலாளர் (CS) மற்றும் சட்டப் பட்டப் படிப்புகளை முடித்துள்ள அவர், ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது தயாரித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகவும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்க  "வெள்ளித்திரை 'அமரன்'... நிஜ வாழ்க்கையின் 'அன்பான கணவன்'! SK - ஆர்த்தியின் 16-வது வெடிங் டே ஸ்பெஷல்!"

இந்த நியமனத்துக்கு எதிராக திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், தமிழ் மொழி அறியாதவரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அதிமுக (AIADMK) ஐடி விங் மற்றும் பாஜக (BJP) உள்ளிட்ட தரப்புகள், தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே மேகதாது அணை மற்றும் காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை டெல்லி பிரதிநிதியாக நியமித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளன.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வெங்கட நாராயணா கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமானவர் என குற்றம்சாட்டியுள்ளார். இதனால் டெல்லியில் தமிழகத்தின் உரிமைகளை அவர் முறையாக முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் விஜய் தனது திரைப்படத் துறை தொடர்புடைய நெருங்கியவர்களுக்கு மட்டுமே உயரிய அரசு பதவிகளை வழங்குவதாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  திமுகவுடன் அண்டர் டீலீங்க்… பிரான்ஸில் விஜய் மேனேஜர் 'ரூட்' ஜெகதீஷுடன் பேரம்..! அம்பலமான ரகசிய சந்திப்பு..!

முதலமைச்சரின் தனி உதவியாளராக (PA) அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதாக வெளியான அரசாணைக்கு அடுத்ததாக, தற்போது இந்த நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் த.வெ.க அரசு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்துள்ளன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago