Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Bheeman FallsOplus_16908288

கோடை வெயிலில் காய்ந்து, எலும்பும் தோலுமாய்க் கிடந்த திருவண்ணாமலை மாவட்டத்தை, இப்போது பெய்துவரும் பரவல் மழை இழுத்து அணைத்துக் குளிர்வித்திருக்கிறது.

அதுவும், ஜவ்வாது மலையும் அதன் அடிவார கிராமங்களும் மழையில் நன்கு நனைந்துவிட்டன. இதன் ஹைலைட்டே… மாவட்டத்தின் சுற்றுலா அடையாளமான பீமன் நீர்வீழ்ச்சி மீண்டும் உயிர் பெற்றதுதான்!மாதக்கணக்கில் மொட்டைப் பாறையாகக் காட்சியளித்த பீமன் அருவியில், இப்போது வெள்ளை நுரை பொங்க தண்ணீர் சீறிப் பாய்கிறது.

பாறைகளில் மோதிச் சிதறும் அந்த இரைச்சல், மலை முழுக்க எதிரொலிக்கிறது. இந்தக் காட்சியைக் கண்ணாரக் காண, சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாகப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

அருவி மட்டுமல்ல… மலை கிராமங்களின் ஓடைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சாகுபடியில் இறங்கியிருக்கும் விவசாயிகளுக்கு இது டபுள் குஷி!

பீமன் பெயருக்குப் பின்னால்… ஒரு புராணக் கதை!ஜமுனாமரத்தூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், ஜவ்வாது மலையின் மடியில் ஒளிந்திருக்கிறது பீமன் நீர்வீழ்ச்சி. இதற்கு ‘பீமன்மடவு அருவி’ என்றொரு பெயரும் உண்டு.உள்ளூர் பெருசுகள் சொல்லும் கதையே தனி சுவாரஸ்யம். மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்தார்களாம். தாகம் தாளாமல் தவித்தபோது, பீமன் தன் கதாயுதத்தால் பாறையை ஓங்கி அடித்தானாம். பிளந்த பாறையிலிருந்து பீறிட்ட நீர்தான், இன்றுவரை பீமன் அருவியாகக் கொட்டுவதாக நம்பிக்கை.

இதையும் படியுங்க  If you are new to the world of sex toys

கதை எப்படியோ… அருவியின் அழகு மட்டும் சத்தியமான நிஜம்! பீமன் அருவிக்கு வந்துவிட்டு, சுற்றியுள்ள இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! இங்கு வந்தால் ஒரே ட்ரிப்பில்… அத்தனையும் பார்க்கலாம்!• கவலூர் வைணு பாப்பு ஆய்வு மையம்: ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்று இங்குதான் உள்ளது , வழி ஜமுனாமரத்தூரிலிருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் பார்க்கலாம். • கொமுட்டேரி ஏரி: அருவியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைதியான ஏரி. படகு சவாரிக்கு செம சாய்ஸ். • சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி: குடும்பத்துடன் ரிலாக்ஸ் செய்ய ஏற்ற ஸ்பாட். • ஜமுனாமரத்தூர் கண்காணிப்பு முனை: மலைத்தொடரின் பிரமாண்டம்… ஒரே பிரேமில்!

சுற்றுலாப் பயணிகளே… ஒரு நிமிஷம்! அழகை ரசியுங்க… ஆனா, பாதுகாப்பு முக்கியம் பாஸ்! ரீல்ஸ் மோகத்தில் தடுப்பு வேலியைத் தாண்டிச் சென்ற இளைஞர் ஒருவர் சமீபத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். வனத்துறையினரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாம். மழைக்காலத்தில் பாறைகள் சோப்பு போல வழுக்கும்… குழந்தைகளைத் தனியே அனுப்பாதீங்க!

இதையும் படியுங்க  காலையிலேயே பேரதிர்ச்சி! வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்ததா? குறைந்ததா?

எப்படிச் செல்வது?திருவண்ணாமலையிலிருந்து 76 கி.மீ. தொலைவு. வாணியம்பாடி, திருப்பத்தூர் வழியாக ஆலங்காயம் சென்று அங்கிருந்து 22 கி.மீ. பயணித்தால் ஜமுனாமரத்தூர் மலை உச்சியை அடையலாம் , அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் கொட்டுகிறது பீமன் அருவி. வேலூரிலிருந்து வருபவர்கள், போளூர் வழியாகப் பேருந்து வசதியைப் பயன்படுத்தலாம்.

தற்போது பருவமழை பெய்து வருவதால் பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது இந்த வீக்கெண்ட் ட்ரிப்பை ஜவ்வாது மலையில் பிளான் பண்ணுங்க… இயற்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 hours ago at 12 hours ago