Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நெதர்லாந்தில் உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சோழர் கால பெருமைகளை வெளிப்படுத்தும் பழமையான செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டின் பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இந்தியாவுக்கு திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற சிறப்பு விழாவில் ஆனைமங்கலம் தாமிர தகடுகள் என அழைக்கப்படும் செப்பேடுகளை இந்திய தரப்பில் பெற்றுக்கொண்டார்.

தென்னிந்தியாவின் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தைச் சார்ந்த இந்த அரிய வரலாற்று ஆவணங்கள், நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் கடந்த சுமார் 300 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டிருந்தன. சுமார் 30 கிலோ எடையுடைய 21 செப்பேடுகள், ஒரு வெண்கல வளையத்தால் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் உள்ளன.

இந்த செப்பேடுகளில் முதலாம் ராஜேந்திர சோழரின் கடற்படை வெற்றிகள், சோழ பேரரசின் நிர்வாகச் சிறப்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வுகளின்படி, இவை கி.பி. 985 முதல் 1014 வரையிலான காலகட்டத்தில் ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோரின் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  அரசியலை தாண்டிய அன்பு! பிரான்சில் இந்திய குழந்தையை கொஞ்சிய பிரதமர் மோடி… நெகிழவைத்த மூவர்ணக்கொடி வரவேற்பு!

இந்த நிகழ்வு இந்தியாவின் பண்பாட்டு மரபு மீட்பில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago