Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அண்ணாமலையின் திடீர் விலகலுக்குப் பிறகும் பாஜக பெரும் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக பாஜக-வின் புதிய மாநிலத் தலைவராகப் பேராசிரியர் ராம சீனிவாசன் நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன், கட்சிக்குள்ளான அதிருப்தி காரணமாகப் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதே இதன் பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.

அதிருப்தியின் பின்னணி
அண்ணாமலையின் ராஜினாமாவைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவரான நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். இருப்பினும், சமீபகாலமாகத் தமிழக பாஜக-வில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களையும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தொடர் ராஜினாமக்களையும் அவரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனம் டெல்லி மேலிடத்திற்குச் சென்றது. குறிப்பாக, அண்ணாமலையின் புதிய இயக்க நகர்வுக்குப் பின், கட்சியைத் தொண்டர்கள் மத்தியில் கட்டுக்கோப்பாக வைத்திருக்கத் தவறியதும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளுமே நயினாரின் அதிருப்திக்கும், இந்த அதிரடி மாற்றத்திற்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ஆந்திராவில் விஜய்யை வச்சு செம பிளான்..! கல்லூரியின் 'பகீர்' போஸ்டர்..! காக்கிநாடாவில் எகிறிய அரசியல் பரபரப்பு

பேராசிரியர் ராம சீனிவாசனின் தேர்வு ஏன்?
பாஜக-வின் மாநிலப் பொதுச் செயலாளராகவும், மதுரையைச் சேர்ந்த சிறந்த கல்வியாளராகவும் அறியப்படுபவர் பேராசிரியர் ராம சீனிவாசன். ஆர்.எஸ்.எஸ் பின்னணி: ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் கொள்கைகளை ஆழமாகக் கற்றவர் என்பதால், டெல்லி மேலிடத்தின் தீவிர நம்பிக்கையைப் பெற்றவராக இவர் விளங்குகிறார்.

அறிவுசார் அரசியல்

தற்போதைய சமகாலத் தமிழக அரசியலில், ஆளும்கட்சியான தவெக மற்றும் பிற திராவிடக் கட்சிகளின் கொள்கைகளை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ள, ஒரு தேர்ந்த கல்வியாளர் மற்றும் தீவிரக் கொள்கைவாதி தலைமை ஏற்பதே சரியாக இருக்கும் என பாஜக தேசியத் தலைமை முடிவெடுத்துள்ளது.

கட்சியைச் சீரமைக்கவும், உட்கட்டமைப்பை பலப்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட பேராசிரியர் ராம சீனிவாசனை முன்னிறுத்துவது, தமிழக பாஜக-வில் ஒரு புதிய தத்துவார்த்த, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago