https://republictn.com/

விஜய் சேதுபதி, விஜய் அவர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு புதிய ஓடிடி தளத்தை தொடங்க வேண்டும் என்றும், அது திரைப்படத் துறைக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, ஒருகாலத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட ஓடிடி சந்தை தற்போது சரிவை சந்தித்து வருகிறது. இதனால் திரைப்படத் துறை மிகுந்த குழப்பநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது, என்று கூறினார்.

மேலும், திரைப்பட டிக்கெட் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்துவது குறித்து அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு இது மிக முக்கியமான வேண்டுகோள், எனக் குறிப்பிட்ட அவர், அரசு முன்னெடுக்கும் ஓடிடி தளம் திரைப்படத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago