Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சினிமா என்பது கலையின் வெளிப்பாடாகவும், பொழுதுபோக்கின் ஊடகமாகவும் இருக்க வேண்டிய இடத்தில், இன்று அது கோடிக்கணக்கான இளைஞர்களின் சிந்தனையையும் வாழ்வையும் அடகு வைக்கும் மாயவலைப் பிம்பமாக மாறிவிட்டது. திரைத்துறையில் கோலோச்சும் நடிகர்களின் வியாபாரத் தந்திரங்களைப்புரியாமல், தங்களை அவர்களின் அடிமைகளாக வரித்துக்கொண்டு சீரழியும் இளைய சமூகத்தின் கண் திறக்கவே சமூக ஆர்வலர் எழுதிய இந்த எச்சரிக்கை பதிவு அவசியமாகிறது.

அவர் எழுதிய பதிவில், ”அஜித், விஜய் ரசிகர்கள் தலயா? தளபதியா? என்று அடித்துக்கொண்டு, மோதிக்கொண்டு நின்ற போதெல்லாம் அஜித்தோ, விஜயோ ”நாங்கள் இருவரும் நண்பர்கள். நீங்கள் அன்போடு இருங்கள். சண்டையிட்டு கொள்ளாதீர்கள்” என்று கூறியது கிடையாது. ரஜினி, கமல் ரசிகர்கள் ஒரு காலத்தில் இதே போன்று சண்டையிட்டு கொண்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்திய பொழுது ரஜினியும், கமலும் ஒன்றாக தோன்றி ”நாங்கள் நண்பர்கள். இது வெறும் திரைப்படம். நீங்கள் சண்டையிட்டு கொள்ளாதீர்கள்” என்று கூறியது கிடையாது. ஏனென்றால் நீங்கள் எந்த அளவிற்கு முட்டாள்தனத்தோடும் மோதி கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு ஒரு நடிகனின் மார்க்கெட் உயரும். சம்பளம் உயரும். அடுத்த படத்தின் பட்ஜெட் உயரும்.

Rajini Kamal

ஆனால் இன்று அஜித்தும், விஜயும் ஒன்றாக தோன்றுகின்றார்கள். ரஜினியும், கமலும் ஒன்றாக சேர்ந்து படமெல்லாம் எடுக்கிறார்கள். ஏனென்றால் இப்போதைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் அறுவடை அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஒரு நடிகன் நினைக்கிறான் ”நீ என்னுடைய ரசிகன் என்றால் நான் நினைத்தபடி எல்லாம் நீ இருக்க வேண்டும். நான் நினைப்பதை எல்லாம் நீ செய்ய வேண்டும்”. ஏனென்றால் ரசிகர்கள் தன்னுடைய அடிமைகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இதையும் படியுங்க  கனவில் கூட நினைக்காத மாற்றம்..! லஞ்சம் கேட்டா என் கதவைத் தட்டுங்க..! புரோக்கர்களை அலறவிட்ட தவெக அமைச்சர்..!

நீயோ சிந்திப்பதற்கு திராணியற்று மறுபடியும் மறுபடியும் நீ அடிமைதான் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய். அவர்களுக்கு பின்னால் சென்று வால் பிடித்து, போஸ்டர் ஒட்டி புகழாரம் செய்வதன் மூலமாக ரஜினி, கமல், அஜித், விஜய் என்பது முடிந்து இன்று தனுஷும், சிவகார்த்திகேயனும் அழைப்பு கொடுக்கிறார்கள். மிகப்பெரிய ஒழுக்கசீலர்கள் அல்லவா இருவரும்? எப்படி ஒரு மனிதன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரண புருஷர்கள் அல்லவா? தமிழ் சமூகத்தின் தலைவர்களாக இவர்களை ஏற்றுக்கொண்டு ஒழுக்கத்தோடும், நேர்மையோடும், நெறியோடும் எப்படி வாழ்வது என்று ஒட்டுமொத்த சமூகமே இவர்களை பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

Rajinikanth

அறிவுகெட்டு மூளை மழுங்கி போய் நிற்கிற என் தமிழ் சமூகமே.. அவர்கள் தங்கள் திரைப்படத்திற்கு போஸ்டர் ஒட்டவும், கொடிபிடிக்கவும், பாலாபிஷேகம் செய்யவும் சம்பளமே இல்லாத அடிமை நாய்களை தேடுகிறார்கள். இலவசமாக பொதி சுமக்கும் கழுதைகளை தேடுகிறார்கள். நீ நாயா? கழுதையா? பன்றியா? என்று யோசித்துப்பாற். ஏன் உன்னுடைய வாழ்க்கையை யாரோ ஒரு நடிகனுக்காக அடகு வைக்கிறாய். 90களில் ரஜினிகாந்த் என்ற ஒரு உயிரினத்தை நம்பி தங்கள் வாழ்வை இழந்து இன்று நடுத்தெருவில் நின்று கொண்டிருக்க கூடியவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர். அதில் பல பேர் செத்தே போய்விட்டார்கள்.

இதையும் படியுங்க  என் வாழ்வின் இரு பெரும் தூண்கள் சரிந்துவிட்டன… ராதிகா சரத்குமாரின் உருக்கமான பதிவு!

ஏன் உயிரினம் என்று கூறுகின்றேன் தெரியுமா? எந்த சமூக ஒழுக்க நெறியும் இல்லாமல் தன்னை நம்புகின்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் மது, புகை போன்ற கேவலங்களை இந்த சமூகத்தில் சகஜ நிலைக்கு மாற்றிய பெரும் பெருமை இந்த உயிரினத்திற்கு தான் உண்டு. இத்தனை வயதை அடைந்தபோதும் அது தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னை திரையுலகில் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக கத்தி, ரத்தம், வக்கிரம், கொலை, போதை என்று படமெடுத்து தன்னால் என்ற சீரழிவை இந்த சமூகத்திற்கு அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Republic Tamil

தன்னுடைய தவறான செயல்கள் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது என்று நினைப்பவன் தான் மனிதன். இந்த சமூகம் எக்கேடு கெட்டாலும் என்னை நான் நிலைநிறுத்திக் கொள்ளுவேன் என்னுடைய துறையில் என்று நினைக்கின்றவனை என்னவென்று சொல்வது. பல காலமாக ரஜினிகாந்த் செய்த அதே யுக்தியை அவனது மருமகன் என்று கையில் எடுக்கிறான். இளைய சமூகமே, இந்த கேவலமான கேடுகெட்ட நடிகர்களை ஒருபோதும் நம்பாதே, அவன் நிகழ்கால அரசியல்வாதியை விட கொடுமையானவன். அரசியல்வாதி கூட 10 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டால், அதில் ஒரு பகுதியை தனதாக்கி கொள்ளுவான். ஆனால், ஒரு நடிகன் நீ கொடுக்கும் 50 100, 200 பணத்தை கொண்டு ஆடம்பர மாளிகை கட்டி நீ எட்டி கூட அவனை பார்த்து விடக்கூடாது என்பதற்காக 20 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டி கேட்டு போடுவான்.

இதையும் படியுங்க  பூத் ஏஜென்ட்களை தூக்கிய அதிமுக! அப்செட்டில் CM விஜய்..! எடப்பாடியின் மாஸ்டர் பிளான்..!
Vijay’

இளைஞனே உன் நேரத்தை உனக்காக செலவிடு. உன் முன்னேற்றத்திற்கு அதை பயன்படுத்து யாரோ ஒரு நயவஞ்சகனிடம் கொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்காதே. ரசிக மனப்பான்மை என்பது ஒரு அடிமைத்தனம். நீ அடிமையாக இருப்பதை விரும்புகிறாயா? கண்மூடித்தனமாகவே இருந்து கொண்டிருக்காதே. கண்களை நன்றாக திறந்து பார். உலகையே தலைமையேற்று வழிநடத்தும் ஆற்றல் மிக்க தமிழ் பேரினத்தின் வித்து. நீ யார் யாருக்கோ வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டு கொடிபிடித்து ஏன் உன்னுடைய வாழ்க்கையை கேவலமாக்குகிறாய்? உன் மரபனுவில் இன்றும் தமிழன் என்ற உணர்வு கொஞ்சமாவது ஒட்டி கொண்டிருந்தால் இந்த ரசிக மனப்பான்மையை விட்டு வெளியில் வா.

உன்னை பற்றி சிந்தி உனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உன் நேரத்தை, அறிவை பயன்படுத்து. சில நாள் நீ போலி என்றும் சூழ்ச்சி என்றும் என் தலைமுறை உணர்ந்து உன் பிம்பங்களை தூள்த்தூளாக நொறுக்கி எறியும் ஒரு நாளை அறத்தமிழன் பேரியக்கம் உருவாக்கும். பொறுத்திரு சில நாள்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago