வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முக்கிய எதிர்க்கட்சியான திமுக தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
சென்னை மாமன்றக் கூட்டத்தில் வெடித்த அரசியல் மோதல்தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அநேகமாக வரவிருக்கும் மழைக்காலத்திற்குப் பிறகு இணைந்து நடத்தப்படலாம் என்று அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தவெக கோட்டையான சென்னையைக் கைப்பற்ற திமுகவின் ‘உண்ணாவிரத வியூகம்’சென்னையிலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில், உதயநிதி ஸ்டாலின், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் தவெகவின் முக்கிய அமைச்சர்களான முதலமைச்சர் பெரம்பூரில் விஜய், புஸ்ஸி ஆனந்த் டி.நகர், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், ஆர்.கே.நகரில் மரியா வில்சன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னையை மீண்டும் திமுகவின் கோட்டையாக நிரூபிக்க, திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒரு முக்கிய வியூகத்தை வகுத்துள்ளனர். தவெக அரசு சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியைத் தனியார்மயமாக்குவது உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என்றும், மக்களுக்குத் தங்கள் எம்.எல்.ஏக்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் குற்றஞ்சாட்டி, திமுகவின் 153 கவுன்சிலர்களும் இணைந்து விரைவில் ஒரு பிரம்மாண்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அரசியல் உஷ்ணத்தை இப்போதே கிளப்ப திமுக முடிவு செய்துள்ளது. சென்னை திமுகவில் சேகர் பாபுவை மட்டுமே மீண்டும் முன்னிறுத்தினால் மேயர் உட்பட பல கவுன்சிலர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால், அவரின் அதிகாரத்தைக் குறைத்து மாற்று நடவடிக்கைகளைத் தலைமை எடுக்க வேண்டும் என்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பேச்சு ஓடுகிறது.
