2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு தங்கள் கட்சி அமைப்பை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில மாவட்ட செயலாளர்களுடைய எண்ணிக்கையை 77லிருந்து 110ஆக திமுக உயர்த்தி இருக்கக்கூடிய நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியுற்ற கொளத்தூர் தொகுதிக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படுகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
பெரம்பூர், கொளத்தூர் என இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து புதிய மாவட்ட செயலாளர் விரைவில திமுகவில்நியமிக்கப்பட இருப்பதாக தகவல். முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை பொறுத்த வரை திமுகவுல சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். அவர் வசம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. துறைமுகம், திருவிக நகர், எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அவர் மாவட்ட செயலாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தல் நடந்தபோது இந்த ஆறு தொகுதிகளையும் சேகர் பாபு தான் கண்காணித்து வந்தார். தேர்தல் பணியும் ஆற்றினார்.
ஆனால் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்ததால் சேகர் பாபு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு சேகர் பாபு தான் காரணம் என திமுகவினரே பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். சேகர் பாபு கொளத்தூர் தொகுதியை சரியாக கண்காணிக்கவில்லை. கொளத்தூர் தொகுதியில் சரியாக தேர்தல் பணியாற்வில்லை. அதுதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் என இப்போதும் சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில் திமுகவில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நிறைய மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் 77 மாவட்ட செயலாளர் என்கிற எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி இருக்கிறார்கள். சென்னையில் ஆறு திமுக மாவட்ட செயலாளர் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இப்போது 10 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.. சேகர் பாபு வசம் இதற்கு முன் ஆறு சட்டமன்ற தொகுதி இருந்த நிலையில் இப்போது சென்னை கிழக்கு மாவட்டத்துக்குள் மூன்று தொகுதிகள்தான் வருகிறது. துறைமுகம், திருவிக நகர், வில்லிவாக்கம் என இந்த மூன்று தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றும் முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக இருக்கும் பெரம்பூர் தொகுதியும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி இந்த இரண்டையும் பெரம்பூரையும் கொளத்தூரையும் இணைத்து புதிதாக திமுகவில் ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க உள்ளனர்.
விரைவில அந்த நியமனம் வரும்போது கொளத்தூர் தொகுதிக்கு புதிய மாவட்ட செயலாளர் திமுகவில் நியமிக்கப்பட உள்ளார். கொளத்தூர் வசம் இருந்த கொளத்தூர் தொகுதி சேகர் பாபு வசம் இருந்த நிலையில் இப்போது அந்த தொகுதி அவரிடம் இருந்து கைமாறுகிறது. புதிதாக ஒருவர் பெரம்பூருக்கும், கொளத்தூருக்கும் சேர்த்து மாவட்ட செயலாளராக திமுகவில் வருகிறார் எனக் கூறப்படுகிறது.
