Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஜாபர் சித்திக், அவரது மனைவி அளித்த குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் மீது அவரது மனைவியே புகார் அளித்து, சிபிசிஐடி விசாரணைக்குப் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாபர் சித்திக், கடந்த 2019-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாகப் பணியில் சேர்ந்தவர். இதற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் டிஎஸ்பியாகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஜூலை 5-ஆம் தேதி பரமக்குடி உட்கோட்ட டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார்.

வேலூரில் பணியாற்றிய காலத்தில், ஜாபர் சித்திக் வேறு சில பெண்களுடன் தகாத தொடர்பில் இருந்ததாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்ட தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவரது மனைவி சோபனா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி வேலூர் போலீசாரிடம் அவர் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  நள்ளிரவில் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரழைத்த ஹரினி.. துடித்த கணவர்.. அலறிய குழந்தை.. நடந்தது என்ன?

மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் சிபிசிஐடி போலீசார் ஜாபர் சித்திக் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பிரிவு 85-ன் கீழ் மனைவியைக் கொடுமைப்படுத்துதல், பிரிவு 115(2)-ன் கீழ் தன்னார்வமாக காயப்படுத்துதல், பிரிவு 351(2)-ன் கீழ் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதனுடன், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3(1)(r), 3(1)(s), 3(2)(va) ஆகிய பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வேலூர் சிபிசிஐடி போலீசாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜாபர் சித்திக் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சிபிசிஐடி போலீசார் நேரடியாக விசாரணையில் இறங்கினர். டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் பரமக்குடிக்கு நேரில் சென்று, ஜாபர் சித்திக்கிடம் தீவிர விசாரணை நடத்தியதுடன், அவரது முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பிலும் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மனைவி அளித்த புகாரில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். விசாரணையின் முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், ஜாபர் சித்திக் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாகக் கருதப்பட்டதைத் தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  வண்டலூரில் வெடித்த வாக்குவாதம்.. முதலமைச்சர் விஜய் பிறந்தநாளில் பரபரப்பு!

பரமக்குடி டிஎஸ்பியாக பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் ஜாபர் சித்திக் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பரமக்குடிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் காவல் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், குறுகிய காலத்திலேயே தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனிடையே, பரமக்குடியில் பொறுப்பேற்ற பிறகு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக ஜாபர் சித்திக் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் சுமார் 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, 11.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் அப்பகுதியில் ‘அதிரடி டிஎஸ்பி’ என சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கல்லூரி ஒன்றில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கி வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கடுத்த சில வாரங்களிலேயே குடும்பப் புகாரின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக குடும்பத் தகராறு தொடர்பான புகார்கள் உள்ளூர் போலீஸ் நிலையங்கள் மூலம் விசாரிக்கப்படும் நிலையில், இங்கு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் உயர் பதவியில் இருக்கும் காவல் அதிகாரி என்பதால், விசாரணை பாரபட்சமின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "கடலையும் பார்க்கலாம்… மேகத்தையும் தொடலாம்! வான்வழியாக மெரினாவை ரசிக்க ரெடியாகுங்க மக்களே!

தற்போது இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய பிற தகவல்கள் குறித்து போலீசார் விரிவாக ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மனைவியின் புகாரால் பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago