Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அதிமுகவில் ஒன்றிய சேர்மனாக இருந்தவர் மடவாளத்தை சேர்ந்த கால்நடை டாக்டர் திருப்பதி விவசாயம் , வட்டி தொழில் கால்நடை தீவன தொழில்களை செய்து வந்தவர் ஜெயலலிதா காலத்தில் திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் பதவியை 50 லட்சம் கொடுத்து கைப்பற்றியவருக்கு எம்எல்ஏ ஆனால் மட்டும் போதும்னு அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திருப்பத்தூர் தொகுதிக்கு சீட் கேட்டு வந்தார்

2026-ல் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு , அதிமுக மாஜி மந்திரி கல்தா கொடுத்தாக கூறி இரண்டே நாட்களில் தவெகவுக்கு தாவி சில கோடிகளை இறைத்து சீட் வாங்கினார், தன் பங்காளியும் பத்தாண்டு எம்எல்ஏவாக இருந்த திமுக நல்லத்தம்பி சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்களை கொண்டு வராததாலும் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து என அவரின் செயல்பாடுகளை பார்த்து கொதித்துபோன தொகுதி மக்கள் திருப்பதியை வாரி அனைத்ததால் எம்எல்ஏ ஆகிவிட்டார் , இதுதான் திருப்பதியின் வரலாறு

இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்குனு தொகுதியை வலம் வந்ததில்,… தேர்தல் நெருங்கும் சமயத்தில் அங்கன்வாடி மையங்கள், ரேசன் கடை , சுகாதார மையங்கள் என திமுக நல்லத்தம்பி முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை தவெக எம்எல்ஏ திருப்பதி ஓடோடி திறந்து வைக்கிறார்.

இதையும் படியுங்க  மு.க.ஸ்டாலினை சந்திக்கும் ராகுல் காந்தி..! சத்தியமூர்த்தி பவனுக்குள் அமைச்சர்கள்..! விஜயின் மாஸ் ஸ்கெட்ச்..!

திருப்பதியின் பாலிடிக்ஸை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்த மகன் கோவிந்த்’க்கு பாலிடிக்ஸ் ஆசை வந்து விட மகனை மாவட்ட செயலாளராக்கி தான் மந்திரி ஆக வேண்டும் என்பதுதான் பெரும் லட்சியமாக இருப்பதாகவும், அதன் அடித்தளமாக தொகுதிக்கு சில திட்டங்கள் வேண்டி மனுக்களை தயாரித்த திருப்பதி , அதனை சாக்காக வைத்து சட்டமன்றத்தில் தன் சகாக்களுடன் சென்று மகன் கோவிந்த்தை மந்திரிகளிடம் அறிமுகம் செய்து விட்டு வந்திருக்கிறார்.


Republic Tamil

அறிமுகம் ஆனதற்கே மகன் கோவிந்த் தார் காரை எடுத்துக்கொண்டு 10 பேரோடு வலம் வர தொடங்கியவரிடம் அப்பாவின் பவரை பயன்படுத்தி காவல்நிலையம், வருவாய்த்துறை, நகராட்சி, யூனியன், பத்திர பதிவு அலுவலகம் மணல் டெண்டர் இதர கனிமவளங்கள் , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி . போதைப்பொருள் என அனைத்தும் கோவிந்த் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர , அந்த 10 பேர் தீயாக வேளை பார்த்து வருவதாக கூறுகின்றனர் விவரம் அறிந்த அரசியல் கட்சிகளின் உள்ளுர் புள்ளிகள்.

டாக்டர் திருப்பதி சாதாரண அரசியல் வாதி இல்லைங்க, பேசியே கல்லை கூட‌ கரைய வைத்துவிடுவார் , யாராவது உதவி கேட்டு போனால் முதலில் தவெகவில் இணைந்து உறுப்பினர் அட்டையோடு வாருங்கள் , மற்றதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்கிறார் , அதேவேளையில் வேண்டப்பட்ட அதிமுகவினரை தேடிச் சென்று கட்சியில் இணைத்து வருகிறார், மறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் நினைவு தினம் அன்று அவரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் தம்பி தயாவிடம் தவெகவில் இணைந்தால் கந்திலி ஒன்றிய சேரமன் ஆக்கிவிடுவாதாக சத்தியம் செய்துவிட்டு வந்திருக்கிறார்

இதையும் படியுங்க  லஞ்சம் கேட்டால்கூட பரவாயில்ல.. தவெக ஆட்சியில அதைவிட மோசம்.. மின்சாரத்துறையில் ஷாக்..!

விஜய் ரசிகர்களாக இருந்தவர்களை மதிப்பதில்லை உங்களுக்கு பாலிடிக்ஸ் வராது என நக்கலடிக்கிறார், அதிமுகவில் இருந்த போது அவரது மகனை ஏன் அரசியலுக்குள் கொண்டு வரவில்லை , நாளைக்கு தவெகவில் சீட் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் அதிமுக பக்கம்‌ போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்? மேற்கு மாவட்ட செயலாளரான முனிசாமி மீது பட்டியல் சமூகத்தவரை தூண்டி தகராறில் ஈடுபட வைத்து மாவட்டத்தை இரண்டாக பிரித்து தெற்கு மாவட்ட செயலாளராகிவிட்டார் , திருப்பதியின் பேச்சுதான் பலம், அவரின் மகன்தான் பலவீனமே என்கிறார்கள் விவரம் அறிந்த தவெகவினர்.

நீங்கள் கூட republic – தமிழில் பஸ் நிலையத்தின் அவலங்களை சுட்டி காட்டியிருக்கிங்க. அந்த செய்தி வந்து ஒரு மாதத்திற்கு பிறகு நகராட்சி ஆணையரை அழைத்துக்கொண்டு கடமைக்காக ஆய்வு செய்துவிட்டு வந்தார். ஒரு மாற்றமும் இல்லை, காகங்கரை ரயில் நிலையத்தில் அரக்கோணம்- சேலம் memo-ரயில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மண்டல மேலாளர், கோட்ட அலுவலர்களிடம் மனு அளித்தார் ஆனால் ரயில் எப்பவும் போல நிற்காமல் செல்கிறது , பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி பஸ்நிலையம் விஜய் ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் புணரமைப்பு செய்து ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள் திருப்பத்தூர் பஸ் நிலையத்தின் அவலங்களுக்கு விடிவு இல்லை , தொகுதிக்கான ஆண்டு நிதி சுமார் ரூ 3 கோடியே 33 லட்சங்கள் விடுவிக்கப்பட்டு விட்டது ஆனாலும் எந்த வேளையும் நடக்கவில்லை இப்படிதாங்க இருக்கு இவரது செயல்பாடு என்கிறார்கள் இவருக்கு ஓட்டு போட்ட பொதுஜனம்,

இதையும் படியுங்க  "பிரச்சாரத்துக்கே போகாம ஜெயிச்சது எப்படி?.. அதெல்லாம் வெறும் லக் தான்… அதிரடி காட்டிய ரோஜா!"

எங்களை பொருத்தவரை அவர் நன்றாக செயல்படுகிறார் தெரு விளக்கு . ரோடு டேமேஜ் போன்றவற்றை முகநூலில் சுட்டிக்காட்டியதை பார்த்துவிட்டு உடனடியாக சரி செய்தார் எம்எல்ஏ திருப்பதி என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மறந்துபோச்சி, சொல்லும்படியான திட்டங்கள் எதுவும் 100-நாளில் கொண்டுவரல, மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் போயிட்டு இருக்கு ஆனால் தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கைகளை கேட்டு பெறாமல் சட்டமன்றத்தில் தூங்கி கொண்டு இருக்கிறார் , மகனுக்கு பட்டாபிஷேகம் செய்யவே காய் நகர்த்தி வருகிறார் , மீண்டும் தேர்தல் நடந்தால் தேறுவது கஷ்டம் , இதுதான் தற்போதைய திருப்பத்தூர்‌ எம்எல்ஏ திருப்பதி’யின் ஒரிஜினல் செல்வாக்காக இருக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago