Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Covai

கோவை மாவட்டம். நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில், ஜோதிடம் பார்க்க வரும் பெண்களை வசீகர வார்த்தைகளால் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவருவதாக ஜோதிடர் கார்த்திகேயன் என்பவர் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு, டி.ஜி.பி மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்குப் புகார்கள் பறந்துள்ளன. முன்னாள் முதல்வர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, “என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என மிரட்டிவரும் இவர் மீது, அவரது தந்தையின் மர்ம மரணம் தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஜோதிடர் கார்த்திகேயனால் பாதிக்கப்பட்ட பெண்கள் எழுதியுள்ள அந்த புகார் கடிதத்தில், ”கோவை மாவட்டம், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் தங்களுக்கு தெரிய படுத்திவது. எங்கள் பகுதியில் கார்த்திகேயன் என்கிற ஜோதிடர் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். தொலைபேசியில் 6.30 முதல் 7.00 மணிக்குள் போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது அடுத்த நாள் காலை 5.00 மணிமுதல் 11.00 மணி வரை ஏதாவதொரு நேரத்திற்கு வரச் சொல்வார். அவர் வரச் சொல்லும் நேரத்திற்கு சென்றால் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு ஜாதகத்தைக் கணிக்காமலே வாய்மொழியாக ஜாதகம் சொல்லுவார்.

இதையும் படியுங்க  போலீஸ்காரர் பொண்டாட்டிக்கே இந்த நிலைமையா..? ரவுடியுடன் உறவு..! இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!

கார்த்திகேயனின் ஜொதிடர் நிலையம்

ஒரு ஜாதகத்திற்கு –500/- பெறுகிறார். பெண்களிடம் அவர்களின் வசதிகேற்ப ஜாதகத்தில் குறை என்று அவர்களை வசியம் செய்து ஏமாற்றி கொண்டிருக்கிறார். பாலியல் ரீதியாக பெண்களை தன் இச்சைக்கு இணங்க வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கிருர். தாங்கள் இதனை சரியான முறையில் விசாரணை செய்து இங்கு வரும் பெண்களை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவர் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டனின் குடும்பத்தினர் தன்னிடத்தில் ஜாதகம் பார்த்து செல்கிறார்கள் என எல்லோரிடமும் பெருமையுடன் பேசி வருகிறார். மேலும், ”எனக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளிடம் நெருங்கிய நட்பு உள்ளது. என்னை யாரலும் ஒன்றும் செய்துவிடமுடியாது” என்றும் கூறி மிரட்டி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக
இப்பகுதியில் உள்ள பெண்கள், ஜாதகம் பார்க்க வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு தள்ளி வருகிறார். இந்த வன்கொடுமையில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்கள் யாரிடமும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்க  "மனுஷனுக்கே இந்த பாசம் கிடைக்காது பாஸ்..! 107 வயசு ஆலமரத்துக்கு தடபுடலா நடந்த பர்த்டே!"

எனவே தகுந்த விசாரணை செய்து அனைத்து பெண்களையும் காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ள அந்த பகீர் புகார் கடிதம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழக காவல் துறை தலைவர், ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிடர் கார்த்திகேயன்

இதுகுறித்து விசாரித்தபோது, ”ஜோசியர் கார்த்திகேயனின் தந்தை 2021ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் கார்த்திகேயன் மீது சந்தேகம் இருந்தது. ஆனால், அவரது பலமான இன்ப்ளூயன்ஸை வைத்து அந்த விவகாரத்தில் இருந்து மீண்டுவிட்டார். கோவை. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல்களில் ரெகுலராக பெண்களுடன் விசிட் அடிப்பார். காவல்துறை முறையாக விசாரணை நடத்தினால் பல விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும்” என்கின்றனர் கோவைவாசிகள்.

இது குறித்து விளக்கம் கேட்டு ஜோசியர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டோம். அவரது தரப்பில் முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவரது விளக்கத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago