Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

எஸ்பிஐ வங்கி கிளை மேலாளரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி, சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள கயல்விழி அழகிக்குச் சொந்தமான கட்டிடத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) கிளை இயங்கி வருகிறது.

இந்தக் கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி (லிப்ட்) பழுதானது தொடர்பாக, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் மற்றும் கயல்விழி அழகிரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் அது வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது.

கட்டிடத்தில் இயங்கி வரும் வங்கியின் மின்தூக்கி தொடர்ந்து பழுதடைந்து இருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறி, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, வங்கி மேலாளர் நேரடியாக கயல்விழி அழகிரியை தொடர்பு கொண்டு, மின்தூக்கி பிரச்சினையை சரிசெய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதையும் படியுங்க  சென்னையில் பயங்கர தீ! பக்கிங்காம் கால்வாய் பகுதி புகைமூட்டத்தில் மூழ்கியது!

இதையடுத்து, கயல்விழி அழகிரி தனது கட்டிடத்திற்கு நேரில் வந்து, வங்கி மேலாளரிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கயல்விழி வங்கி மேலாளரை ஆபாசமாக பேசி, தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் கயல்விழி அழகிரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Republic Tamil

ஆபாசமாக பேசுதல், கையால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் கயல்விழி அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கயல்விழி அழகிரி தனது வழக்கறிஞர்களுடன் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் காவல் ஆய்வாளர் ரோகிணி தலைமையிலான போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, அவரது விளக்கத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்க  காக்கி உடைக்கே பாதுகாப்பில்லையா? சிவகங்கையில் பெண் போலீசுக்கு நேர்ந்த பகீர் அநீதி..

புகார் மனு, சிசிடிவி காட்சிகள் மற்றும் கயல்விழி அழகிரி அளித்துள்ள விளக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் அளித்த புகார் மற்றும் விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயல்விழி அழகிரி மீதான இந்த வழக்கில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago