https://republictn.com/

திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி வழக்கின் விசாரணை நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்

கே.ஆர்.பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இறுதிச் சுற்று வரை லீடிங்கில் இருந்த பெரியகருப்பன், கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, 1 ஓட்டில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏவாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகளான எஸ்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர வழக்காக இன்று விசாரித்தது. அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட தபால் வாக்குகள் தமிழகத்தில் வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என்று நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஒருவேளை இந்த வழக்கின் விசாரணை கே.ஆர் பெரியகருப்பணுக்கு சாதகமாக அமைந்தால் தகெகவின் எம்.எல்.ஏ எண்ணிக்கையில் ஒன்று குறையும். இது தவெகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜனாமா செய்துள்ளார் விஜய். தற்போது 107 எம்.எல்.ஏ. இரண்டு நாளில் நடக்கவுள்ள பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் திருப்பத்தூர் எம்.எ.ஏ வாக்கு பதிவு செய்வது கடினம். வழக்கு உள்ளதால் எம்.எல்.ஏ-வாக தொடரலாம். ஆனால், வாக்கெடுப்பில் பொதுவாக செலுத்த முடியாது. (மத்தியபிரதேஷ் முகேஸ் மல்கோதரா எம்.எல்.ஏ வழக்கில் நீதிமன்றம் வழிகாட்டியது அப்படியே). ஆக 106 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே.


விசிக 2, இரு கம்யூனிஸ்ட்கள் 2+2, காங்கிரஸ் 5 மொத்தம் 117. இந்திய முஸ்லீம் லீக் இல்லை என்றால் பெரும்பான்மை இல்லாமல் அரசு தோல்வியை தழுவும். அதாவது திமுக அசைக்க நினைத்தால் இந்த அரசு விழுந்துவிடும் நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago