https://republictn.com/

தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியைத் தழுவியிருப்பது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தத் தோல்வி வெறும் அரசியல் மாற்றமல்ல. இது ஒரு கசப்பான வரலாற்றுப் பிழை என எதிர்கடசியினரே குமுறி வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதி மக்களின் இந்தத் தவறான முடிவால், ஒரு ரவுடி சட்டமன்றத்திற்குள் நுழையும் அவலம் நேர்ந்துள்ளதாக திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் கடும் ஆக்ரோஷத்துடன் வீடியோ வெளியிட்டு முகத்திரையை தோலுரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் நன்றி மறந்தவர்கள். மாற்றம் கொடுக்கிறேன் என்று சொல்லி யாருக்கு ஓட்டுப்போட்டு இருக்கிறீர்கள் தெரியுமா? ரவுடி வி.எஸ் பாபு மீது 15க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவர் ஒரு ரவுடி.

நீங்கள் பல பேர் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டுள்ளீர்கள். தன்னுடைய எம்.எல்.ஏ வேட்பாளர் யார்? அவரது பின்புலம் என்ன? என எதுவுமே தெரியாமல் ஓட்டுப்போட்டுள்ளீர்கள். போட்ட பிறகு நான் ஒரு ஓட்டு தான் தெரியாமல் போட்டேன். இப்படியாகி விட்டது என வருத்தப்படுகிறார்கள். தமிழகமே ஒரு மயான அமைதிக்கு போய் விட்டது. ரவுடி வி.எஸ்.பாபு மீது 18 குற்றவழக்குகள் உள்ளன. ரவுடி வி.எஸ்.பாபுவின் தொழில் கந்துவட்டி, பைனான்ஸ் கொடுப்பது. அவரால் எத்த குடும்பங்களும், தாய்மார்களும் சீரழிந்திருக்கிறார்கள் தெரியுமா?

ஆனால் வி.எஸ்.பாபு தனது பிரமாணப்பத்திரத்தில் தன் மீது இதுவரை எந்த வழக்குகளும் இல்லை என மூடி மறைத்துள்ளார். அவரது பொய்யான தேர்தல் பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசியாவில் தலைசிறந்த முதலமைச்சராக விளங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் செய்த சாதனைகளை கொளத்தூர் மக்கள் எண்ணிப்பார்க்காமல் ரவுடி பாபுவுக்கு வாக்களித்துள்ளார்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் தவெக வேட்பாளர்கள் பிறரை பற்றிய பின்னணியையும் தெரிவித்துள்ளார் வி.எஸ்.ஞானவேலன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்- அப் சேனலில் இணைந்திருங்கள். லிங்க்:-https://whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

https://whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago