Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மூன்று டன் ரேஷன் அரிசி பிடிபட்ட வழக்கில், உண்மைக் குற்றவாளியைத் தப்பிக்க வைக்க வழக்கறிஞரை தரகராகப் பயன்படுத்தி, வெறும் 50,000 ரூபாய்க்குப் பேரம் பேசி, காக்கிச் சட்டையின் மாண்பையே நடுத்தெருவில் ஏலம் விட்டிருந்தது திருப்பத்தூர் மாவட்ட சிவில் சப்ளை சிஐடி காவல்துறை

“யாரையாவது ஒருவனை குற்றவாளியாகக் காட்டுங்கள், நான் மேல் அதிகாரிகளிடம் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஒரு பொறுப்பு அதிகாரியே பேசும் ஆடியோவில்”மாதம் மாதம் சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்குப் பல லட்சங்கள் மாமூலாகப் போகிறது” என்ற திடுக்கிடும் தகவலும், ஒட்டுமொத்தத் துறையுமே ஊழல் சாக்கடையில் மூழ்கிக் கிடக்கிறதோ என்ற நியாயமான ஆத்திரத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்ததை

“காசுக்கு விலைபோன போலீஸாரின் சல்லித்தனம்..! திருப்பத்தூரை உலுக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ஊழல் ஆடியோ..!” என்ற தலைப்பில் ஜூலை 18-ஆம் தேதி Republic-தமிழ் இனையத்தில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது

இதன் எதிரொலியாக ஜூலை 20-ந்தேதி சம்மந்தப்பட்ட சிவில் சப்ளை போலீசார் ‘மோகன்தாஸ்’ கோயமுத்தூர்க்கும் “காதர்கான்’ கள்ளக்குறிச்சிக்கும் தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  Our commitment to customer service means that our friendly and

ரேசன் அரிசியை கடத்தினால் குண்டாஸில் கைது செய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ள நிலையில், ரேசன் அரிசியை கடத்தும் தலைவனை விடுவிக்க லஞ்சம் பெற்றதுமில்லாமல் போலியான ஒரு வாடகை நபரை கைது செய்த குற்றத்திற்காக திருப்பத்தூர் சிவில் சப்ளை சிஐடி போலீசார்களை வெறும் ட்ரான்ஸ்பர் மட்டுமே கொடுத்து அனுப்பி வைத்தது எந்த வகையான தண்டனை இது ? குறைந்தபட்சம் சஸ்பெண்டாவது செய்து இருக்கலாமே என மக்கள் கேட்காமல் இல்லை ஆபிசர்ஸ்

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago