https://republictn.com/

”லஞ்சம் வாங்காதீங்க… யாராவது லஞ்சம் கேட்டால் இது விஜய் ஆட்சின்னு தைரியமாச் சொல்லுங்க” என கரூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ஆக்ரோஷமாகப் பேசிய பேச்சு இன்னும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஓரளவுக்குக் குறைந்திருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரும் உருவாகத் தொடங்கியுள்ளது. ஆனால், நாணயத்தின் இன்னொரு பக்கம் கோட்டை வட்டாரத்தில் பெரும் புகைச்சலையும், அதிருப்தியையும் கிளப்பியுள்ளது.

முதலமைச்சர் விஜய் நேர்மையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நினைப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அவரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள “அசைக்க முடியாத இரும்புத் திரை” ஆளுங்கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய மனக்குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவுக்குச் சிவப்புக் கம்பளம்
அரசியல் வட்டாரத்தையும், கோட்டையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளையும் தற்போது கடும் கொதிப்பில் ஆழ்த்தியிருப்பது ஒரு முரண்பாடான ஒப்பீடுதான். சினிமா நெட்வொர்க்கில் இருக்கும் நடிகர், நடிகைகள் நினைத்தால் மிக எளிதாக முதலமைச்சரை நேரில் சந்தித்து, சிரித்துப் பேசி, புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அமைச்சர்களோ, முக்கியத் துறை அதிகாரிகளோ, தோழமைக் கூட்டணித் தலைவர்களோ முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்றால், அதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.

பெண் இன்ஸ்பெக்டர் மீது கை வைத்த பகீர் பின்னணி.. விஜய் கைக்கு சென்ற ரிப்போர்ட்: ஒரே இரவில் காலியான அருண் ஐபிஎஸ்..!

கட்டுப்படுத்தும் அந்த மூவர்
அமைச்சர்களும், அதிகாரிகளும் முதலமைச்சர் விஜயை நெருங்க முடியாமல் தடுக்கும் அந்த இரும்புச் சுவருக்குப் பின்னால் இருப்பது யார்? கோட்டை வட்டாரங்கள் விரல் காட்டுவது இந்த மூன்று பேரைத்தான். ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி. இந்த மூன்று பேர் கொண்ட கூட்டணிதான் முதலமைச்சரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்து, யாரைச் சந்திக்க வேண்டும், யாரைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக அதிகாரிகள் மத்தியில் பலத்த அங்கலாய்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்களின் அனுமதி பெறாமல் அமைச்சர்கள் கூட முதலமைச்சரின் அறைக்குள் நுழைய முடிவதில்லை என்ற குமுறல் புகைந்து கொண்டிருக்கிறது.

புலம்பும் சி.விஜயபாஸ்கர்
இந்த இரும்புத் திரை எவ்வளவு வலிமையானது என்பதற்கு அண்மைய உதாரணம்தான் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் நிலைமை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஷ்ணு ரெட்டி மூலமாகப் பலத்த எதிர்பார்ப்புகளுடன் த.வெ.க-வில் இணைந்தவர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர். இணைந்தபோது ஒரே ஒரு முறை மட்டும்தான் முதலமைச்சர் விஜயை அவரால் நேரில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு, கட்சியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் முதலமைச்சரைச் சந்திக்கப் பலமுறை முயன்றுள்ளார்.

“அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து ஓட ஓட விரட்டிய பெண்கள்.. ₹18,000 கோடி திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்!

உயரதிகாரிகள், தனக்குத் தெரிந்த அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முயற்சி செய்தும், அந்த ‘மூவர்’ வளையத்தைத் தாண்டி விஜயபாஸ்கரால் உள்ளே செல்ல முடியவில்லை. “கட்சியில சேர்ந்து என்ன பிரயோஜனம்? தலைவரைப் பார்க்கவே முடியலையே…” என்று புதுக்கோட்டை விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களிடம் ஓப்பனாகவே புலம்பத் தொடங்கியுள்ளது இப்போது லீக் ஆகியிருக்கிறது.

சிபாரிசோடு யாரும் வராதீங்க… கூட்டணி கட்சியினருக்கு ஆப்பு..! விஜய் கறார் உத்தரவு..!

நிர்வாகத்தில் தூய்மை, நேர்மை என்பதைத் தாண்டி, மக்களாட்சியில் ‘அணுகுமுறை’ என்பது மிக முக்கியமானது. எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், தன் சொந்த அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் முகம் பார்த்துப் பேசாத ஒரு முதலமைச்சரால் முழுமையான அரசை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 hours ago at 5 hours ago