Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முதலமைச்சர் பதவி என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்கு மெகா பவர்புல் பதவியாக தெரியும். ஆனால் அதைவிட ஏகப்பட்ட பொறுப்புகளும், தலைவலி பிடித்த சிக்கல்களும் நிறைந்த ஒரு முள் கிரீடம் தான். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் இவ்வளவு பெரிய மாநிலத்தை இவர் எப்படிப்பா நிர்வகிக்க போகிறார் என கோட்டையில் இருக்கிற அதிகாரிகள் தங்களுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பினார்கள். ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பல சீனியர் முதல்வர்களை பார்த்த கோட்டை அதிகாரிகள் இப்போது முதல் முறை எம்எல்ஏ. அதுவும் முதல் முறையே முதலமைச்சர் என உள்ளே நுழைந்த விஜயை ஆச்சரியத்தோடு தான் பார்த்தார்கள்.

”ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 7 மாதங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

இப்போது விஜய் முதலமைச்சராகி இரண்டு மாதம் முடிந்து விட்டது. ஆனால், இந்த இரண்டு மாதத்தில் தமிழ்நாட்டோட மிக முக்கிய துறையான உள்துறையை தன்னோட கையில் வைத்திருக்கிற முதலமைச்சரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கிற பவரில் இருக்கிற அந்த டாப் அதிகாரிகளாலேயே நேரில் பார்க்க முடியவில்லை என்பதுதான் கோட்டையில் தற்போதைய எதார்த்த நிலவரமாக இருக்கிறது.

இதையும் படியுங்க  "பசியோடு யாரும் படிக்கக் கூடாது!" - பெருந்தலைவர் காமராஜர் பெயரில் CM விஜய்யின் மெகா திட்டம்; பெற்றோர்களை நெகிழவைத்த நள்ளிரவு SMS!

தலைமை செயலகத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி என அந்த இரண்டு பேர்தான் இப்போது அத்தனை அமைச்சர்களையும் எல்லா துறை செயலாளர்களையும் கூப்பிட்டு மீட்டிங் நடத்துகிறார்கள். ஆர்டர் போடுகிறார்கள். அவர்கள் விரும்புகிற மாதிரிதான் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் டிரான்ஸ்பர் லிஸ்டே ரெடியாகிறது.

திமுகவுக்கு தில் இருக்கா..? மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சவால்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

முதலமைச்சரிடம் இதைப்பற்ற பேச வேண்டும் என நினைக்கிற உயர் பொறுப்பில் இருக்கிற அதிகாரிகளுக்கு வாரத்த்தில்; மூன்றுமுறை முதலமைச்சரை பார்ப்பதே வ்குதிரை கொம்பாக இருக்கிறது என்கிறார்கள். பொதுவாக தமிழ்நாட்டை ஆண்ட அத்தனை முதல்வர்களும் போலீஸ் அதிகாரம் கொண்ட அந்த உள்துறையை தங்களது சொந்த கட்டுப்பாட்டில தான் வைத்திருந்தார்கள். ஏனென்றால போலீஸ் கையில் இருந்தால்தான் கட்சியும், ஆட்சியும் கையில் இருக்கும் என்பது அவர்களது அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. ஆனால் இந்த உளவுத்துறை தினம் தினமும் கொடுக்கிற இந்த ரகசிய குறிப்புகளை வைத்து நடவடிக்கை எடுப்பதற்கு தினமும் மீட்டிங் நடத்துவது அனைத்தையும் முதலமைச்சர் விஜய் பெரிய அளவில் விரும்பவில்லை என கோட்டை வட்டாரத்தில் குமுறுகிறார்கள். அதன் காரணமாக முதலமைச்சர் விஜய் இப்போது ஒரு மெகா அதிரடி முடிவை எடுப்பதற்காக ஆலோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.

இதையும் படியுங்க  'சித்தம் கலங்கிப்போச்சு..! உதயநிதிக்கு அரசியல் ஆண்மை இருக்கா?'' கு.ப.கிருஷ்ணன் சவால்..!

அதாவது இதற்கு முன் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது போலீஸ் அதிகாரம் கொண்ட இந்த உள்துறைய தன்னலமற்ற தலைவரான கக்கனிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு வந்த எந்த முதலமைச்சரும் உள்துறைக்கு என தனி அமைச்சரை நியமிக்கவே இல்லை. ஆனால், இப்போது முதலமைச்சர் விஜய் மக்கள் நலன் சார்ந்த சில முக்கியமான துறைகள் மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு இந்த அசுர அதிகாரம் கொண்ட உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தவெக அரசை ஆட்டிப்படைக்கும் ‘உதயநிதி – சபரீசன்’ நிழல்..! விஜய்க்கு குழிபறிக்கும் நண்பரின் மைத்துனர்..!

இந்த தகவல் வெளியில் கசிந்ததும் அதிர்ச்சியான சில டாப் அதிகாரிகள் எல்லாம் கடும் முயற்சிக்கு பிறகு முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து ”சார் தப்பித்தவறிகூட இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்துராதீங்க. இப்ப இருக்கிற பொலிட்டிக்கல் சூழல்ல உள்துறைக்கு தனி அமைச்சரை போட்டா அது மிகப்பெரிய விபரீதத்தில போய் முடிஞ்சிரும். அன்னைக்கு இருந்த கக்கன் மாதிரி இப்போ தன்னலமற்ற தலைவர்கள் எல்லாம் யாருமே கிடையாது. தமிழ்நாட்டில இளைஞர்களும் பெண்களும் உங்களை நம்பிதான் ஓட்டு போட்டுருக்காங்க. அதனால போலீஸ் அதிகாரம் உங்க கையை விட்டு போகக்கூடாது” என முதலமைச்சர் விஜயிடம் ரொம்ப ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  விஜய்யை உசுப்பிய திருமா… திமுக போட்ட ‘திருச்சி ஸ்கெட்ச்’ க்ளோஸ்..? அதிர்ச்சியில் அறிவாலயம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago