Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தவெக-வை சேர்ந்த லயோலா மணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது, அந்த உத்தரவின் படி அரசு ஆணையின்படி லயோலா மணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தினுடைய தலைவராக நியமிக்கப்படுவதோடு இந்த மூன்று ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது நியமனத்திற்காக பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம் அதாவது தமிழ்நாடு புக் டெக்ஸ்ட் புக் அண்ட் எஜுகேஷன் சர்வீஸ்
கார்ப்பரேஷன் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் இந்த நியமன ஆணையை வழங்கி இருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் லயோலா மணி. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திமுக ஆட்சியில் லியோனி பதவி வகித்து வந்தார்.

இதையும் படியுங்க  டெல்லி விசிட்… ஜூன் 4 க்ளைமாக்ஸ்! அண்ணாமலையின் ‘மாஸ்டர் பிளான்’… ஆடிப்போய் கிடக்கும் கமலாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago