Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிமுகவில் இருந்து இதுவரை மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே தவெக தரப்பில் இருந்து தங்களிடம் பேரம் பேசப்பட்டதாக திமுகவும், திமுக தரப்பில் இருந்து தங்களிடம் பேரம் பேசியதாக தவெக தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இநிலையில் அதிமுக தரப்பில் இருந்து மேலும் நான்குஎம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைய போவதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ், திருத்தனிஎம்எல்ஏ ஹரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் ஆகியோருடன் சி.வி.சண்முகமும் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே சி.வி.சண்முகம் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் மாநில அளவில் பெரிய பொறுப்பை கேட்டு டிமாண்ட் செய்வதால் அவர் தவெக கட்சியில் இணைவதில் காலதாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதற்கிடையே இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் விதித்த தடை ஆளுனரிடம் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கொடுத்த குதிரைபேர புகார் ஆகியவற்றால் தவெக தலைமை நிதானமாக செயல்பட முடிவு செய்துள்ளதாம். இதனால்தான் சிவி.சண்முகம் இணைப்பு விழா தள்ளி போவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  Go For Western Economy With These Pioneering
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago