Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கரூர் விவகாரம் கரூர் விவகாரம் சிபிஐக்கு திமுகா புகார் கடிதம் கொடுத்திருக்கின்றது. ஏற்கனவே இன்றைக்கு நீதிமன்றத்தில் பரபரப்பான வாதங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கக்கூடிய நிலையில கரூர் விவகாரம் சம்பந்தமாக சிபிஐக்கு திமுகா ஒரு புகாரை கொடுத்திருக்கின்றது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது அந்த விசாரணையை அவர் கண்காணிப்பார் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்திருந்தார்.

“குடும்பத்தோட கட்சிக்கு வாங்க..!” அதிமுக-வில் டிடிவி.தினகரன்- சசிகலா..? இபிஎஸ் கொடுத்த அசைன்மென்ட்..!

இதனை அடுத்து பல்வேறு கோரிக்கைகளுடன் திமுக நீதிமன்றை நாடி இருந்தது. இப்பொழுது திமுகவின் மனு தள்ளுபடி செய்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக சர்சைக்குரிய கருத்து தெரிவித்த நபர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூறி மனுத்தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படியுங்க  விஜய்யின் 'ரூட் மாஃபியா' மோசடி அம்பலம்..! தேசிய ஊடகங்கள் வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்..!

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஐ விசாரணையின் கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு தற்போது திமுக சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக
இருக்கும் ஆதவ் அர்ஜுனா வழக்கின் சாட்சிகளை பாதிக்கும் வகையிலும் முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதேபோல காவல் துறைக்கு எதிராகவும் அந்த கருத்தை அவர் தெரிவித்திருப்பதால் அது குறித்து சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்திட உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறது.

விஜய்க்கே அல்வா..! செந்தில் பாலாஜி-யை மறைத்து பாதுகாக்கும் தவெக விஐபி-யின் பி.ஏ..! படுபயங்கர ட்விஸ்ட்..!

அதேபோல முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூருக்கு செல்வது தொடர்பாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருடைய குடும்பங்களுக்கு நிதி உதவி கருணை அடிப்படையிலான பணி நியமனம் அல்லது பிற அரசு நலன்கள் வழங்கப்படுவதும் சிபிஐயின் கருத்தை பெற்ற பின்னரே மேற்பார்வை குழு அவசியம் என கருதும் பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளின் நிலையை சிபிஐ உரிய முறையிலும் வெளிப்படையான முறையிலும் பதிவு செய்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் இதன் மூலம் வாக்கு மூலங்களின் சான்று மதிப்பு எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  விஜய்யின் 3-வது பித்தலாட்டம்..! பிறக்கப் போகும் குழந்தைகளை ஏமாற்றுகிறார்..! வெளுத்து வாங்கிய முரசொலி..!

“கள்ளக்காதலி வெளியே போனதும்.. 3 வயது குழந்தை மீது கள்ளக்காதலன் வெறி..! மயிலாடுதுறையை உலுக்கிய கொடூர சம்பவம்!”

மேலும் இந்த விவகாரத்தில் நியாயமான, சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை நடைபெறுவதை உறுதி செய்ய மேற்பார்வை குழு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த கரூர் பயணம் மேற்கொள்ள குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ள நிதி உதவி கருணை அடிப்படையிலான பணி நியமனம் அல்லது பிற அரசு நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளை சிபிஐ கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அதன் மட்டுமில்லாமல் சாட்சியங்கள் வெளிப்படையான முறையில் இருக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago