Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு தப்பி செல்லக்கூடாது என்பதால் சென்னை விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கு விசாரணைக்காக நாளை காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இந்த கேஸில இன்னைக்கு வரைக்கும் 9 பேரை கைது செய்திருக்கிறார்கள். கரூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் தேடியும் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்கும் சிக்கவில்லை.

இதை பற்றிதி போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, “தன்னோட ஆட்சியை கவிழ்க்க சதி செஞ்ச கேஸ் என்பதால் முதல்வர் விஜய் ரொம்ப சீரியஸா இருக்கிறார். ஒவ்வொரு மணி நேரமும் கேஸோட அப்டேட்டை கேட்டு கேட்டு வாங்கிட்டு இருக்கிறார். இந்த கேஸில சம்பந்தப்பட்ட யாரையும் விட்டுடக் கூடாது. செந்தில் பாலாஜி, அசோக்குமார் எல்லாத்தையும் தூக்குங்கள் என கறார் ஆர்டர் போட்டிருக்கிறார்.. அதனாலதான் வலைவீசி தேடிகிட்டு இருக்கிறோம்” எனச் சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜி தரப்பில் பேசியபோது, “இந்த கேஸ் ரொம்பவே சீரியசானது. அதனால வெளியே தலைமறைவா இருந்துகிட்டே உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கலாம்னு வழக்கறிஞர்களிடம்பேசிகிட்டு இருக்காங்க. ஒருவேளை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டால், சுப்ரீம்கோர்ட் போகலாம். அங்க என்ன மாதிரி லீகல் பாயிண்ட்ஸ் வெச்சு முன்ஜாமீன் வாங்கலாம்னு ஆலோசனை நடத்திகிட்டு இருக்காங்க..” என்கிறார்கள்.

திமுக தரப்பிலோ, “செந்தில் பாலாஜி செய்யுற எல்லாமே கட்சிக்குதான் சிக்கலாகுது. இதுல கட்சி தலைமை என்ன சொல்ல முடியும்.? அவர் கேஸ்.. அவருதான் பார்த்துக்கனும் இல்லையா?” என்கிறார்கள் கூலாக. இந்த வழக்கை முதல்வர் விஜய் சும்மா விடுவதாக இல்லை. செந்தில் பாலாஜிக்கு இது தெரியும் என்பதால் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார் என்கிறார்கள். ஏற்கனவே தம்பி அசோக்குமார் ஒரு பக்கம்.. இப்போது அண்ணன் செந்தில் பாலாஜி இன்னொரு பக்கம் தலைமறைவு.. இவர்கள் கைதாகும் வரைக்கும் அல்லது கோர்ட்ல ஆர்டர் வர்ற வரை பரபரப்புதான்.

2 thoughts on “விஜய் போட்ட கறார் ஆர்டர்… கழற்றிவிட்ட திமுக… எங்கே ஓடினார் செந்தில் பாலாஜி..?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago