Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகளுக்கு வார்னிங் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஷார்ட் டிரீட்மென்ட் கொடுத்த விஜயின் நடவடிக்கை, வைகோ உள்ளிட்ட தோழர்களை பதற வைத்திருக்கிறது.

பெரும்பான்மையில்லாத தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, முஸ்லிம்லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்றவர்கள் விஜயின் கேபினட்டில் இணைந்தனர். கடந்த சில நாட்களாக விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கள் முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வந்தன. சட்டமன்றத்தில் விஜய் செய்த ஒரு செய்கையை கடுமையாக கண்டித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை போதாது, வேறு பவர்ஃபுல் துறை வேண்டும். இல்லை என்றால் ஆதரவை மறு பரிசீலனை செய்வோம் என திருமா வெளிப்படையாகவே மிரட்டல் பாணியில் பேசினார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு, வாரிய பதவிகள் என பல கோரிக்கைகளும் மறைமுகமாக முன்வைக்கப்பட்டன. இந்த வலியுறுத்தல்கள் விஜய்க்கு எரிச்சலை ஏற்படுத்தின. இரண்டு எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ஒரு அமைச்சர் பதவி வாங்கி, தொடர்ந்து டார்ச்சர் செய்வது சகிக்கவில்லை. திமுகவுடன் இரட்டை வேடம் போடும் இவரை வைத்து ஐந்தாண்டுகள் நகர்த்த முடியாது என அவரது நெருக்கமான ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷிடம் விஜய் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  முதல்வரை இப்படியா பேசுவது..? விஜய் மீது வன்மத்தைக் கக்கிய தமிழன் பிரசன்னா..! எல்லை மீறும் திமுக..?

இதனை தொடர்ந்து முதல்வர் விஜய், அவர்களிடம் தெளிவான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ”திருமாவிடம் நேரடியாக சொல்லுங்கள். நமக்கு இந்த ஆதரவு தேவையில்லை” எனக் கூறச் சொல்லி இருக்கிறார் விஜய். அதற்கு திருமா தரப்பில், ”முதல்வர் தவறாக புரிந்து கொண்டு விட்டார்” என விளக்கம் கொடுத்தாலும் பதில் ஏதும் சொல்லாமல் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை திருமாவை நிலைகுலைய செய்துள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் விஜய் தரப்பை சமாதானப்படுத்த டெல்லி பிரதிநிதியாக வெங்கட்ட நாராயணா நியமனத்தை ஆதரித்து பேசினார். ”நாங்கள் எந்த டிமாண்டும் வைக்கவில்லை. திருச்சியில் போட்டியிடவில்லை. மாற்றம் கேட்கவில்லை” என பல்டிக்கு மேல் பல்டி அடித்தார் திருமா. இந்த திடீர் மாற்றத்திற்கு விஜயின் எச்சரிக்கை தான் காரணம் என கோட்டை வட்டாரமும் கூறுகிறது. இந்த சம்பவம் வைகோ உள்ளிட்ட மற்ற தோழமைக் கட்சி தலைவர்களையும் பதற வைத்துள்ளது. கூட்டணி அரசு எப்படி முன்னேறும்? இடைத்தேர்தலில் என்ன நடக்கும்? என அரசியல் விமர்சகர்களும் தீவிரமாக விவாதித்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்க  படித்தால் இல்லை… தன்னை பார்க்க வந்து செத்தால் அரசு வேலை..! முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய மருது அழகுராஜ்..!

தோழர்களுக்கு ”நீங்க கிளம்புங்க” எனச் சொல்லும் அளவுக்கு அரசியல் பார்வையாளர்கள் அனைவரின் கண்களும் பனையூர் பக்கமே விவாதித்து கொண்டிருக்கின்றனர். விஜயின் தலைமைத்துவம் இப்போது கடுமையான சோதனையில் இருக்கிறது. ”தோழர்களுக்கு நீங்க கிளம்புங்க” எனச் சொல்லும் அளவுக்கு அவர் விஜய் தயாராக இருக்கிறாரா? அல்லது இது வெறும் எச்சரிக்கை மட்டுமா? இந்த ட்ராமா எப்படி முடியும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago