Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பெண் கல்வியை ஊக்குவிப்பதிலும், இளம் சாதனையாளர்களைக் கண்டறிந்து கௌரவிப்பதிலும் நவசமாஜ் மகளிர் மேடை தொடர்ந்து முன்னின்று உழைத்து வருகிறது. அந்த வகையில், நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்த மாணவிகளுக்குப் பாராட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

நவசமாஜ் ‌ மாநிலத் துணைத் தலைவர், மகளிர் மேடையின் நிர்வாக தலைவர், எழுத்தாளர், மேனாள் அரசு துணைச் செயலாளர் (தலைமைச் செயலகம்) இரா. கலைச்செல்வி தலைமை உரையாற்றினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் சட்டமன்ற கூடுதல் செயலாளர் திருமதி. தேன்மொழி சிறப்புரை ஆற்றினார்.

இதையும் படியுங்க  சீறும் சிங்கப்பெண்கள் படை.. குற்றவாளிகளுக்கு நடுக்கம்! தொடக்க விழாவில் CM விஜய் முழு உரை!

விழாவில் இவ்வருடம் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதும், சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. மேலும், முக்கியப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

விழாவில், நவசமாஜ் மகளிர் மேடை நிர்வாகிகள் சபிதா, புவனேஸ்வரி, லலிதா லட்சுமி, சந்திரமோனி, பிச்சைமணி, செல்வி ராஜாமோகன், சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், விழாவில் நவசமாஜ் மாநிலத் தலைவர் டாக்டர் போராசிரியர் அன்பானந்தம், மாநில செயலாளர் பன்வார், மாநில அமைப்புச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் சேகர் பாபு மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் கே.என்.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago