Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதையும், விரைவில் தாயாகவுள்ளதையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற அவரது ‘மா இன்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram) திரைப்படத்தின் வெற்றி விழாவில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் பகிர்ந்து கொண்டார்.

திரைப்பட விழாவில் பேசிய சமந்தா, “ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சிறிய இடைவெளி. நான் தற்போது மகப்பேறு விடுப்பு (Maternity Leave) எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நிலையை அடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” எனத் தெரிவித்தார். இதன் மூலம் அவர் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தினார்.

சமந்தாவின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அவருக்கு வரும் டிசம்பர் 2026-ல் குழந்தை பிறக்கவுள்ளது என கூறப்படுகிறது.

மேலும், சமந்தா பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநரான ராஜ் நிடிமோருவை கடந்த டிசம்பர் 2025-ல் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ் நிடிமோரு ‘தி ஃபேமிலி மேன்’, ‘சிட்டாடல்’ போன்ற பிரபல வெப் தொடர்களின் இயக்குநராக அறியப்படுகிறார்.

இதையும் படியுங்க  ”குருவின் பாராட்டு.. சீடனின் வேட்டை! 'கான் சிட்டி' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்!"

சமந்தா நடிப்பிலும், அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டிராலலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) தயாரிப்பிலும் வெளியான ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது.

மயோசிடிஸ் (Myositis) பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நடித்த இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில், சமந்தா தனது இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago