Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கான் சிட்டி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தனது ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், ‘கான் சிட்டி’ படத்தில் அவரது நடிப்பைப் பாராட்டி, “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். என் பெயரை நீ காப்பாற்றிவிட்டாய்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் மனம் விட்டு சிரித்து ரசித்த படம் இதுதான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை குடும்பத்துடன் ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும், “ஏமாற்றாதே, ஏமாறாதே” என்ற நல்ல கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘கான் சிட்டி’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "தாயின் சம்மதம்.. ரசிகர்களின் தீர்ப்பு! ராகவா லாரன்ஸின் எமோஷனல் அரசியல் அறிவிப்பு!"

படத்தின் வெற்றிக்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினரின் கடின உழைப்பிற்கு, லோகேஷ் கனகராஜின் இந்தப் பாராட்டு மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago