https://republictn.com/

பிரான்சில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘லெ மான்ஸ்’ (Le Mans) சர்வதேச 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியின் போது, ஸ்டாண்டில் இருந்து அவரது மனைவி ஷாலினி உற்சாகமாக கைகளை அசைத்து அஜித்திற்கு ஆதரவளித்த எமோஷனல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரான்சின் புகழ்பெற்ற ‘சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்’ (Circuit des 24 Heures du Mans) ஓடுதளத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், லெ மான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்திய அணியாக ‘அஜித் குமார் ரேசிங்’ (AKR) அணி சாதனை படைத்துள்ளது.

மொத்தம் 62 கார்கள் பங்கேற்ற இந்த கடுமையான போட்டியில், அஜித்தின் ‘டீம் ரெட்ஆண்ட் பை விராஜ்’ (Team RedAnt by Virage) அணியின் கார் எண் 16, LMP3 Pro/Am பிரிவில் 9-வது இடத்தைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் (Top 10) இடம்பிடித்தது. அதே அணியின் மற்றொரு கார் எண் 36, ஒட்டுமொத்த தரவரிசையில் 13-வது இடத்தைப் பெற்றது.

பந்தயம் நிறைவடைந்த பிறகு, அஜித் குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய குடும்பப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் “Perfect Couple Goals” எனப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் காண நடிகர் அஜித் குமார் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று போட்டியை நேரில் கண்ட இயக்குநர் ஏ.எல். விஜய், “இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் இது ஒரு மைல்கல் தருணம்” என்று குறிப்பிட்டு, அஜித்திற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சினிமா உலகைத் தாண்டி, சர்வதேச மோட்டார் பந்தய உலகிலும் தனது முத்திரையைப் பதித்து வரும் அஜித் குமாரின் இந்த சாதனை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago