https://republictn.com/

திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக வலம் வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக அரசியலிலும் களம் இறங்கப் போகிறாரா என்ற புதிய விவாதம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கஸ்தூரி ராஜாவிடம், “போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா?”

அதற்கு பதிலளித்த அவர், “இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது ஒரு பொதுச் சேவை. அதில் என்னுடைய மகன்கள் மட்டுமல்ல, என் பேரன்கள் கூட அரசியலுக்கு வரலாம்” என்று தெரிவித்தார்.

தனுஷ் அரசியலுக்கு வரமாட்டார் என்று நேரடியாக மறுக்காமல், அனைவருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உள்ளது என கஸ்தூரி ராஜா கூறியிருப்பது, தனுஷ் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, “சென்னையின் பவர் சென்டர் போயஸ் கார்டனா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம்தான் சென்னையின் மிகப் பவர்புல்லான இடம்” என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், தனது மகன் தனுஷின் கடின உழைப்பைப் பற்றி பேசிய கஸ்தூரி ராஜா, “தனுஷ் என்னுடைய இன்ஸ்பிரேஷனை மட்டும் பயன்படுத்தவில்லை; என்னையே முழுமையாகப் பயன்படுத்துகிறான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் தனுஷ், அடுத்து அரசியலிலும் களம் இறங்குவாரா என்ற விவாதத்தை கஸ்தூரி ராஜாவின் இந்தப் பேட்டி மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago