Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய தலைவராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருப்பது, திமுக அமைச்சர்கள் மீதான பழைய ஊழல் வழக்குகளை தூண்டுவதற்கே என மூத்த பத்திரிகையாளர் திரிசக்தி சுந்தரராமன் அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர், ”லஞ்ச ஒழிப்புத்துறையின் முக்கியப் பொறுப்பில் அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணியில், திமுக முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஊழல் வழக்கில் கைது செய்வதற்கான வியூகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில், செந்தில் பாலாஜி தொடர்பான மின்சாரத்துறை, டாஸ்மாக் ஊழல் நிதியிலிருந்து 7.5% முதல் 10% வரை குறிப்பிட்ட முக்கிய நபர்களுக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், கரூரில் செந்தில் பாலாஜிக்கு நடந்தது போன்றதொரு அதிரடி சோதனையையும் கைதையும் உதயநிதிக்கு எதிராகவும் நிகழ்த்த அருண் ஐபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

அருண் ஐபிஎஸ் நியமனத்திற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன்தான் பரிந்துரை செய்தார் எனப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இந்த நியமனம் குறித்து இருவேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய முதலமைச்சர் விஜய், அவரது நிர்வாகத்தினர், முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் முதலைகளைச் சட்டப்படி வளைப்பதற்காக இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு புறம், இது திமுகவே செட்டப் செய்த ஒரு நியமனம் என்றும், திமுக தலைவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையால் எந்தவித இடைஞ்சலும் வராதவாறு அனாவசிய நடவடிக்கைகளைத் தவிர்த்துப் பாதுகாக்கும் ‘ஸ்லீப்பர் செல்லாக’ அவர் செயல்பட வாய்ப்புள்ளது என்றும் சந்தேகம் எழுப்பப்படுகிறது” எனக்கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  ''இனி, என் கணவர் விஜய் கூடத்தான் இருப்பேன்..! சமாதானமான சங்கீதா..! வெளியாகும் அந்த வீடியோ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago