Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டம்-ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது. கணவரை இழந்து தனியாக வாழும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து ஆளுங்கட்சிப் பிரமுகர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம், தற்போதைய ஆட்சியின் பெண்கள் பாதுகாப்பு குறித்த வாக்குறுதிகள் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், ‘வி த லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப்பதில், “தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

இதையும் படியுங்க  “வீட்டிலிருந்தபடியே அரசு சேவைகள்… ஒரு ‘Hi’ போதும்! இனி ‘நம்ம அரசு நம் கையில்!’

சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் ” என வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அத்துடன் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வேம்புலியுடன் விஜய் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago