சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் நடந்திருக்கிற ஊழல்களை தூசி தட்டி விசாரிக்க போகுதாம் புதிய தவெக அரசு. அதோட முக்கிய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை துவங்கி இருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முன்னாள் முதன்மைச் செயலாளராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் தனக்கு கீழே இருக்கிற முக்கிய அதிகாரிகளும் முக்கியமான கட்டட அனுமதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி மாற்றம் நடந்த ஒரு சில நாட்களில் பெரிய அளவில் சம்பாதித்து இருக்கிறார். தேவையில்லாத திட்ட அனுமதிகளை நிலுவையில் வைக்க கூடாது என உத்தரவு போடப்பட்டது.
இதையே சாக்காக வைத்து ஒரே நாளில் 60 பிளான்களுக்கு அனுமதி கொடுத்து அறுவடையில் உச்சம் தொட்டாராம் பிரகாஷ். குறிப்பாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் பாலமாக இருக்கிற பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தின் ஈசிஆர் திட்டத்திற்கு ரூ.50 கோடிக்கும் குறையாத தொகையையும், ஒரு சொகுசு அபார்ட்மெண்ட்டையும் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தோட உரிமையாளர் அபினேஷ்தான் அதிமுக, திமுக ஆதரவில் ஆட்சியை அமைக்கவும், தவெக ஆட்சியை தடுக்கவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. பாஷ்யம் நிறுவனத்தோட ஃபைல்களை சிஎம்டிஏ-வில் இப்போது நிறுத்தி வைக்க சொல்லி கட்டளை போடப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்கும் ஒரு நாளைக்கு முன் அந்த பிரகாஷ் ஐஏஎஸ் ஃபைலை கிளியர் செய்துள்ளார் என ஆட்சி மேலிடத்திற்கு சிஎம்டிஏ-வில் இருந்து பதில் போக, பிரகாஷ் ஐஏஎஸ் அதிகாரமே இல்லாத வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கூடுதல் ஆணையராக தூக்கி அடிக்கப்பட்டாராம். இப்போது அவர் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணையும் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
