https://republictn.com/

“பிச்சை எடுப்பதற்கு எதற்காக கட்சி வைத்திருக்கிறீகள். காங்கிரஸ் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு வெட்கம் மானம், ரோஷம், , சூடு, சொரணை ஏதாவது ஒன்று இருக்கிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாசறை பாணருக்கு புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் பேசிய சீமான், “மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று சொல்பவன் யார்..? அவன் வேற கட்சியா..? மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றியை நான் வெற்றியாகவே கருதுவதில்லை..? ஆனாலும் அந்த எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணிட்டு தி.மு.கவை எப்படி வேணா திட்டிக்கோ.. கச்சத்தீவு பத்தி கேட்டா ‘நோ கமெண்ட்ஸ்னு’ ஒரு அமைச்சர் சொல்றாரு.. ‘நோ கமெண்ட்ஸ்னு’ சொல்லவா இவ்ளோ பேர் கிளம்பி வந்தீங்க? துறைமுக நகரத்தை எதுக்கு திரும்ப துறைமுக நகரமாக்குறீங்க? என் வெற்றியை தள்ளிபோடலாம்.. ஆனால் தடுக்க முடியாது.

மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று சொல்பவன் யார்..? அவன் வேற கட்சியா..? மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றியை நான் வெற்றியாகவே கருதுவதில்லை..? ஆனாலும் அந்த எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணிட்டு தி.மு.கவை எப்படி வேணா திட்டிக்கோ.

உலக வரலாற்றில் நாம் தமிழர் கட்சி போல் இவ்வளவு தோல்வியை பெற்ற ஒரு அரசியல் கட்சி இருக்காது.. இனியும் இருக்காது.. ஆனால் இந்த இயக்கம் கலைந்துபோய் விடும் என நினைக்காதீர்கள்.. அதே புத்துணர்ச்சியோடு எத்தனை தேர்தல் வந்தாலும் மறுபடி மறுபடி களத்தில் பாயும்இரட்டை இலையில் வென்றவன் வெக்கமே இல்லாம எதுக்கு பதவி விலகுனான்?.. எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபையை அமைப்போம்னு ஒரு தம்பி சொல்றாரு – அமைச்சர் ரமேஷை விமர்சித்த சீமான்”காங்கிரஸ்காரர்கள் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறார்களா..? மானம், ரோஷம், சூடு, சொரணை எதாவது இருக்கா..?

தி.மு.க வீட்டில் பிச்சை எடுத்து ஒரு ராஜ்யசபா சீட்டு.. த.வெ.க வீட்டில் பிச்சை எடுத்து ஒரு சீட்டு.. இப்போ தான் தி.மு.ககாரனுக்கும் அறிவு வருதா..? திமுக போட்ட பிச்சை காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டு. ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு. கமலுக்கு 100 நல்லபடம். எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு. 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? தேர்தல் வெற்றி தோல்விக்கு நான் அப்பாற்பட்டவன். நமக்கு இருப்பது தற்காலிக பின்னடைவுதான். 8 அடி பின்னோக்கி வருவது 40 அடி தாண்டுவதற்கு சமம்.

ஒவ்வொரு தோல்வியும் அதற்கான வெற்றியை தயாரித்துக் கொண்டே இருக்கிறது; இனிமேல் நாம் பேச மாட்டோம்; நம்மை பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள்நாம் நிறைய தோற்று போயிருக்கிறோம். உலக வரலாற்றில் இவ்வளவு தோல்விகளை சந்தித்த இயக்கம் வேறு இல்லை, இருக்கபோவதும் இல்லை.

எத்தனை தோல்விகள் வந்தாலும் தளராமல் நிற்போம். எதற்காக நாங்கள் வெல்ல கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதற்காகவே நாங்கள் வென்றே தீருவோம்; எங்களது வெற்றி சற்று தள்ளிப் போகலாம், ஆனால் நிச்சயம் வந்தே தீரும்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago