Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

adhav

ஆண்டுக்கு ₹5000 கோடி வரை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக பொதுப்பணித்துறை, இப்போது லஞ்சப் பேய்களின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் உள்ள ஊழல் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள 70 கோடி ரூபாய் சுருட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு ரகசியமாக செட்டில் செய்துள்ள அதிரடித் தகவல் அம்பலமாகியுள்ளது. “உங்களை யாரும் இடமாற்றம் செய்ய மாட்டார்கள், பழையபடி கல்லா கட்டுங்கள்” என த.வெ.க பிரமுகர் கொடுத்த ஒற்றை தைரியத்தில், சென்னை முழுவதும் மீண்டும் டெண்டர் கமிஷனும், வசூல் வேட்டையும் வெறியோடு அரங்கேறி வருகின்றன.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூலம் தான் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தருவது, கட்டிட பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் துறையில் ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி முதல் 5000 கோடி வரை பணிகள் நடைபெறும்.

இதையும் படியுங்க  அதிர வைக்கும் திமுக-வின் ‘டாப் -8’ ஊழல் ஃபைல்ஸ்..! நாறடிக்க CM விஜய் ஸ்கெட்ச்..! அலறும் அறிவாலயம்..!

இதில் சென்னையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் சிண்டிகேட் அமைத்து, இந்த ஆட்சியிலும் தொடர்ந்து பதவியை தக்க வைப்பதற்காக ரூ 70 கோடி வசூலித்துள்ளாராம். புதுச்சேரியில் வைத்து இந்த பணத்தை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி தமிழக வெற்றிக் கழக முக்கிய பிரமுகருக்கு பணத்தை செட்டில் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய மாட்டோம் என்று இந்த பிரமுகர் உத்தரவாதம் அளித்ததாக தெரிகிறது.

இதனால் சென்னையில் உள்ள பொறியாளர்கள் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஆட்சியில் வழக்கு, பல்வேறு முறைகேடு விவகாரத்தில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் இருந்தவர்கள் தவெக பிரமுகர் பணம் வாங்கியதால் இந்த ஆட்சியிலும் ஓட்டி விடலாம் என்ற தைரியத்தில் உள்ளனராம். மேலும் பணியிட மாற்றம் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் மீண்டும் கல்லா கட்டி வருகின்றனராம். வழக்கம் போல அலுவலக பணியிடம் உட்பட அனைத்து பணியிடங்களிளும் வசூல் வேட்டை நட்தி வருகின்றனர். அதேபோல டெண்டர் பில் தொகைக்கு கமிஷன் வழக்கம்போல வசூல் செய்து வருகிறார்கள். மாற்றம் என வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக நேர்மையான அதிகாரிகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்க  திமுக-வை கைகழுவும் ஓ.பி.எஸ்..! தவெக-வில் இணையும் தர்ம யுத்தம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்ன செய்கிறார்..? அவருக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கப்போகிறது.? அவரது மைத்துனர் சார்லஸ் மார்ட்டின் சில தினங்களுக்கு முன் ஆதவ் அர்ஜூனா பற்றி பேசியது காதுகளில் மீண்டும் ஒலிக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago