https://republictn.com/

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள “கருப்பு” திரைப்படத்தின் வெற்றிக்காக, மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி 18 அடி உயர அரிவாளை காணிக்கையாக செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

படம் வெளியாகும் முன்பே மதுரை அழகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்த ஆர்.ஜே. பாலாஜி, திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் இந்த காணிக்கையை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி உயர அரிவாளை சமர்ப்பித்து, கோவிலில் சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்று வழிபட்டார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago