https://republictn.com/

சொல்லாமல் திமுகவை விட்டு சென்று காங்கிரஸ் துரோகம் செய்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி, பல தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அணியில் வெற்றி பெற்று, பின்னர் மற்றொரு அணியில் இணைந்துள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார்.

சொல்லாமல் திமுகவை விட்டு சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், துரோகம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதேவேளையில், திமுகவை விட்டு சென்றவர்கள் குறித்து தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

“திமுக என்பது வற்றாத ஜீவநதி போன்றது. அவ்வப்போது சிலர் வந்து இளைப்பாறி செல்வார்கள்,” என்று கூறிய ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாட்டு அரசியலில் லாட்டரி குடும்பம் தற்போது அழுத்தம் தரும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் சாடினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago