மாற்றம் வேண்டி வாக்களித்தவர்கள் கடந்த கால திமுக, அதிமுக ஆட்சிகளை குறைகூறி தப்பிப்பதை பெரிய அளவு ரசிக்கவில்லை. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, பரவலாக பொதுமக்கள் மத்தியிலும் கோபமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழலிக்ல் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவுகளை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அதிரடி வேட்டையில் இறங்கியுள்ள போலீசார் பலரை தட்டித்தூக்கி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ரௌடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
எக்ஸ்தளப்பதிவில் இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில் ரௌடிகள் சரிபார்ப்பு – 6967. ரௌடிகள் கைது மற்றும் நீதிமன்ற காவல் – 467 ரௌடிகளுக்கு எச்சரிக்கை – 6540 நன்னடத்தை பிணை பத்திரம் – 303 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டடத்தில் ரௌடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரௌடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 8 பேர் கைதாகியுள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் சிறப்புத் தணிக்கை நடத்தினர். மதுரை மாவட்டத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ரௌடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 8 பேர் கைதாகியுள்ளனர். சேலம் மாநகரத்தில் ரௌடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 14 பேரும், மதுரை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்: ரௌடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 33 பேர் கைது. சென்னையில் ரௌடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 36 பேர் கைதாகி உள்ளனர். கோவை மாவட்டத்தில் ட்ரோன் கண்காணிப்பு மூலம் பொது இடங்களில் மது அருந்தியவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு ட்ரோன் கண்காணிப்பு மூலம் குற்றவாளிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
முதலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். காவல்துறையும், பள்ளி ஆசிரியர்களையும் சுதந்திரமாக விட வேண்டும். போதை வஸ்துக்களை விற்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
