நவம்பர் 8, தீபாவளி நாள். ஒரே நாளில், ஒரே மாநிலத்தில் 11 கொலைகள்! திருச்சியில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று பேர், சிவகங்கையில் இருவர், தேனியில் காவல்துறை அதிகாரி என தொடர்ச்சியாக கொலைகள் அரங்கேறியுள்ளன.
இது தற்செயலா? இல்லை, சட்டம் – ஒழுங்கு செத்துப்போனதன் சாட்சியா? – 11 சம்பவங்கள் – சுருக்கமாக ஒரு லிஸ்ட் 1. தேனி – காக்க வந்தவரே பலி!
சமதர்மபுரத்தில் மது போதையில் கும்பல் சாலையை மறித்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது. தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில்குமாரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானியனுக்கு?
2, திருச்சி – 3 உயிர்கள்! திருச்சியில் சிறார்கள் இருவர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் என பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன. பிஞ்சுகளை கூட விடவில்லை என்றால், இது என்ன சமூகம்?
5, சிவகங்கை – இரட்டை கொலை! சிவகங்கையில் 2 கொலைகள் நடந்துள்ளன. மானாமதுரையில் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். காரைக்குடியில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
7. சென்னை – வியாசர்பாடியில் ஓட ஓட விரட்டி வெட்டு! – 19 வயது ஆட்டோ ஓட்டுநர் தனுஷ். அண்ணனுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை தட்டிக்கேட்க போனவரை, 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியுள்ளது. ஓட முயன்றும் விடவில்லை. ஸ்டான்லியில் உயிர் பிரிந்தது.
8. திருவள்ளூர் – இளம்பெண் பலி! திருவள்ளூரில் ஓர் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 1 கொலை நடந்துள்ளது.
9. கடலூர் – 1 கொலை + போலீஸ் மீதே தாக்குதல்! கடலூரில் ஒரு கொலை நடந்ததுடன், ஒரு கூட்டத்தால் நான்கைந்து காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்
10. திண்டுக்கல் – 1 கொலை! திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு கொலை பதிவாகியுள்ளது.
11. கள்ளக்குறிச்சி – 1 கொலை! கள்ளக்குறிச்சியிலும் ஒரு கொலை பதிவாகியுள்ளது.

மொத்தம்: திருச்சி 3 + சிவகங்கை 2 + தேனி 1 + சென்னை 1 + திருவள்ளூர் 1 + கடலூர் 1 + திண்டுக்கல் 1 + கள்ளக்குறிச்சி 1 = 11
republic | tamil அலசல் , இது ஏன் நடந்தது?
1. போதை + ரீல்ஸ் மோகம்: தேனி சம்பவம் இதற்கு நேரடி சாட்சி. சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்டதற்கே கொலை.
2. முன்விரோதம் + கும்பல் கலாச்சாரம்: சென்னை சம்பவத்தில் முன்விரோதம் இருந்ததாக தகவல். ஒருவரை அடிக்க 6 பேர் கூட்டம் வருகிறது என்றால், காவல்துறை மீது பயம் எங்கே?
3. பண்டிகை கால பாதுகாப்பு எங்கே?: பொதுவாக பண்டிகை காலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், முன்விரோதம், போதை கும்பலின் அத்துமீறல்கள் காரணமாக 11 கொலைகள் பதிவாகியுள்ளன.
தவெக அரசுக்கு கண்டனம் – தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்! என்று எதிர்க்கட்சிகள் கொதித்துள்ளன.
கேள்வி இதுதான்:

• காவலரையே கொல்லும் தைரியம் குற்றவாளிகளுக்கு எங்கிருந்து வந்தது? • 40 லட்சம் நிவாரணம் கொடுப்பது மட்டுமே அரசின் வேலையா? தேனி SSI குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம் தேவைதான். ஆனால், உயிர் போவதற்கு முன் தடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? • சிறுவர்கள், பெண்கள், ஐடி ஊழியர், காவலர்… யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றால், சட்டம் – ஒழுங்கு எங்கே இருக்கிறது?
பண்டிகை நாளை கொண்டாட வேண்டிய மக்கள், இன்று பயத்தில் வீட்டுக்குள் முடங்கும் நிலை வந்தால், அது ஆட்சியின் தோல்வி இல்லாமல் வேறு என்ன?
“நான் ரெடி”ன்னு சொன்னீங்க… ஆனா தமிழ்நாடு ரெடியா இல்லை சார்!
“ஐ ஆம் வெயிட்டிங்”ன்னு நீங்க சொன்னீங்க… இங்க மக்கள் இன்னும் சட்டம்-ஒழுங்குக்காக வெயிட்டிங் சார்
விசில் போடு… விசில் போடு-ன்னு பாட்டு மட்டும் போதாது சார், சட்டத்தை மீறுறவங்களுக்கு விசில் அடிக்கணும்!
தமிழ்நாடு பட்டாசு சத்தத்தால் அல்ல, கொலை சத்தத்தால் அதிர்ந்தது என்ற கறை, இந்த தீபாவளியில் விழுந்துவிட்டது. அதை துடைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெறும் அறிக்கையால் அல்ல, இரும்புக்கரம் கொண்டு குற்றத்தை ஒடுக்குவதால் மட்டுமே.
