”கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை..” என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.அதுபோல பெரியார் நூலக விவகாரம், தமிழ்நாடு முழுவதும் நூலகத்ததுறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்ந்து அம்பலமாக்கிக் கொண்டிருக்கிறது.
”இன்னும் புதுசு புதுசா நிறைய ஊழல் நடந்திருக்கு”’ என்று பல பேர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சொல்கிறார்கள். அந்த அளவுக்கு புதிய ஊழல் நடந்திருக்கிறது. அதாவது நூலகத்துறையை பொறுத்தவரை அது ஒரு தனி உலகமாக இருக்கிறது. எழுத்தாளர்கள், வாசகர்கள் அந்த நூலகத்திற்கு சென்று படிக்கக்கூடியவர்கள், மாணவர்கள் என்று அந்த உலகம் தனி. எனவே அது வெகு மக்களிடம் சென்று சேராத ஒரு துறையாக இருக்கக்கூடிய காரணத்தால் அங்கு மிகப்பெரிய ஊழல்கள் இத்தனை நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போது கோவை பெரியார் நூலகத்திற்கு பிறகுதான் இந்த விஷயங்கள் அத்தனையும் வெளிவர தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல மாவட்ட நூலகங்களுக்கு கடந்த ஆண்டுகளிலே வாங்கப்பட்ட நூல்களில் பழைய புத்தகங்களில் 2026 பிரிண்ட் தான். ஒரு புத்தகம் ஒரு உதாரணத்துக்கு பொன்னியின் செல்வன் எடுத்துப்போம் பொன்னியின் செல்வன் 2026ல் பிரிண்ட் பண்ணப்பட்ட புத்தகம் ₹1000 ஒரு புத்தகம் என்று கொடுப்பார்கள். ஆனால் ஆர்டர் கொடுக்கும்போது அப்படி கொடுப்பார்கள். புது பிரிண்ட் வேணும், ஜிஎஸ்எம்ல அந்த தாள் இருக்கணும் என்பதெல்லாம் குறிப்பிட்டுக் கொடுப்பார்கள். ஆனால் வரும்போது பொன்னியின் செல்வன் என்று வரும். அந்த எழுத்தாளர் பெயர் வரும். ஆனால் அது 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அச்சடிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் குடோனில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த புத்தகமாக இருக்கும்.
அதனுடைய ஒரிஜினல் விலை 50% கழிவில் தான் கிடைக்கும். 50% தள்ளுபடி போய் வெறும் 500 ரூபாயில் கிடைக்க வேண்டிய புத்தகத்தை, 300 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய புத்தகத்தை நூலகங்களுக்கு அதே ₹1000 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய மோசடி நடைபெற்றிருக்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இது மாதிரியான பல நூதன முறைகளில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது. இந்த நூல்களை வாங்கக்கூடிய இடத்திலே உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய சொந்த மச்சான், தங்களுடைய கிளாஸ்மேட் நண்பர்கள், தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த நண்பர்கள், மனைவிக்கு சொந்தக்காரர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு பப்ளிஷர் போல. அவர்கள் பெயரில் இவர்கள் புத்தகத்தை வாங்கி கொடுப்பது அல்லது இவர்களே சில புத்தகங்களை டம்மியாக எழுதி அதை கொண்டு வந்து நூலகங்களிலே சேர்ப்பது உள்ளிட்ட பல விஷயங்களை செய்திருக்கிறார்கள்.
வெறும் 200, 300 கூட தேராத புத்தகங்களை கூட 1500, 2000 என்று சொல்லி ”இது நல்ல குவாலிட்டியான புத்தகம்” என்று அந்த கமிட்டியில் இருப்பவர்களை நம்ப வைத்து அல்லது கட்டாயம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இந்த புத்தகங்கள் வாங்க வைக்கப்பட்டிருக்கின்றது. இதில் பழைய புத்தகங்கள் ஸ்டாக்கான புத்தகங்கள் நமக்கு தெரியும். புத்தக கண்காட்சிக்கு போனாலும் சரி அல்லது குறிப்பிட்ட சில பதிப்பகத்துக்கு போனாலும் கிளியரன்ஸ் சேல் அப்படின்னு போடுவாங்க. துணிக்கடையில் எப்படி ஆடி மாத தள்ளுபடி போடுவார்களோ, அந்த மாதிரி அந்த எடிஷன் அந்த வருஷத்தோட முடிஞ்சிரும்.
இப்ப அடுத்த வருஷத்துக்கு அதிலிருந்து திருத்தங்களோடும் புதிய அட்டை படத்தோடும் புதிய சில திருத்தங்களோடும் புத்தகங்கள் வரும்போது அதனுடைய விலையில சில மாற்றங்கள் இருக்கும். அந்த தாள் ஜிஎஸ்எம் என்று குறிப்பிடுவார்கள். தாளினுடைய குவாலிட்டி எல்லாம் நிறைய மாறுபாடுகள் இருக்கும். ஆனால் இந்த பழைய புத்தகங்களை எல்லாம் பல நூலகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுடைய வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
இதை உடனடியாக கண்டறிந்து இதில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அத்தனை பேரும் தண்டிக்கப்பாட வேண்டும் என்பதுதான் நூலகர்களுடைய வேண்டுகோள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையாகவும் இருக்கின்றது. தமிழக அரசு இந்த விஷயத்தை சற்று லேசாக எடுத்து கொள்ளாமல், மிக தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள்? அந்த கண்காணிப்பு குழு என்ன செய்து கொண்டிருந்தது? யாருடைய உத்தரவின் பெயரில் இந்த போலி புத்தகங்கள் உள்ளே வந்தது என்ற முழு விவரங்களையும்கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை எல்லாம் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
