Modi

கடந்த வாரம் டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அரசின் கொள்கை வழிகாட்டியாக ஆர்எஸ்எஸ் கருதப்படும் நிலையில ஆர்எஸ்எஸின் மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தை கூட்டி இந்தியா முழுக்க பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு குறைந்து வருவது பற்றி ரொம்பவே கவலையோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு பலம் வாய்ந்த வட இந்திய மாநிலங்களில் இப்போது அந்த கட்சியோட செல்வாக்கு குறைந்து வருவது குறித்து சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸின் இந்த விவாதத்துக்கு முக்கிய காரணமாக பல
விஷயங்களை ஆராய ஆரம்பித்து இருக்கிறார்கள். பலம் பாய்ந்த வடஇந்தியாவில் சற்று சறுக்கல் ஏற்படலாம் என்கிற நிலையில் வட இந்தியாவை விட பலம் குறைந்த தென்னிந்தியாவில் பாஜகவின் அடுத்த கட்ட பிளான் என்ன என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் பேசிய மூத்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் ”2014ஆம் ஆண்டு மோடி முதல்முறையா பிரதமர் பதவி ஏற்றபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதல்களை கொஞ்சம் கூட மீறாம ஆட்சி செஞ்சார். ஆனா, மோடியோட இரண்டாவது ஆட்சி காலத்துல ஆர்எஸ்எஸக்கும், பாஜக அரசுக்கும் இடையில கருத்து வேறுபாடுகள் வந்துச்சு. மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆன உடனேயே, ஆர்எஸ்எஸின் சில முக்கியமான பரிந்துரைகளும், வழிகாட்டுதல்களுக்கும் மோடி அரசால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதுதான், பாஜக அரசோட செல்வாக்கு குறைவதற்கு முக்கிய காரணம்” என ஓப்பனாவே குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  தலைமுறைகளைக் கடந்த தலைவன்: தோற்கடிக்க முடியாத நாயகன்..! 76 வயதிலும் குறையாத மோடி மேஜிக்!

ஆர்எஸ்எஸின் வழிகாட்டுதல்களை மோடி அரசு துச்சமாக மதித்தால் 2029ல முடிவுகள் வேற மாதிரி இருக்கும் என மரண வார்னிங் இந்த கூட்டத்தில்பாரதிய ஜனதா கட்சிக்கு விடுக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *