Doctor Saravan

தமிழக அரசியலில் ‘கட்சி தாவல்’ வித்தைக்கு பெயர் போனவர் என்றால் அது மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணனாகத்தான் இருக்க முடியும். மதிமுகவில் தொடங்கி, பாஜக, அதிமுக என டாப் கியரில் கட்சிகளை வலம் வந்தவர். மதிமுகவில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்புகளோடு செயல்பட்டு வந்தார். அங்கு ஏற்பட்ட மோதலால் 2015-ம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜக- மதிமுக- திமுக- பாஜக.?
2016ஆம் ஆண்டு அங்கிருந்து திமுகவிற்கு பல்டி அடித்தார். 2017ல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்தாக அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் போஸ் மரணம் அடைந்ததால், மீண்டும் 2019ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக சரவணன் வெற்றி பெற்றார்.

Doctor Saravanan

அதிமுகவிற்கு அந்தர் பல்டி
அடுத்தாக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக தனக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்து கொண்ட சரவணன் அங்கிருந்து மீண்டும் பாஜகவிற்கு தாவினார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணி நேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கினார். மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சரராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாக்டர் சரவணன் இரவோடு இரவாக அமைச்சர் பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்ட கையோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்க  சங்கீதாவுக்கு செட்டில்மெண்ட்.. விஜயின் லண்டன் டூர் பகீர் சீக்ரெட்..! அட்வான்ஸாக பறந்த செல்லம்..! 

மீண்டும் திமுகவில் மீண்டும் இணைய காய் நகர்த்தியவருக்கு ஸ்டாலின் இடம் கொடுக்கவில்லை. அதிமுக தலைமைக்கு தூது விட்டவர் அக்கட்சிக்கு ஓடினார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டாலும் டாக்டருக்கு தோல்விதான். அதிமுகவில் இருந்து விலகியவர் தற்போது ஆளுங்கட்சியான தவெகவில் சில மாதங்களுக்கு முன்புதான் தஞ்சம் புகுந்தார். 9 முறை கட்சி மாறினாலும், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் எப்படியாவது சீட்டையோ அல்லது பதவியையோ தட்டிப் பறிப்பதில் கில்லாடியான சரவணன், தற்போதும் தனது அடுத்த டார்கெட்டை ஃபிக்ஸ் செய்துவிட்டார்.

மாவட்டச் செயலாளர் பதவிக்கு குறி
இதற்காக அவர் கையில் எடுத்திருக்கும் அஸ்திரம்தான் தீபாவளி பரிசு பாசம். “விஜய் ஆட்சியின் தலை தீபாவளியை கொண்டாடுவோம்” என்ற அதிரடி ஸ்லோகனுடன், திருமங்கலம் தொகுதி த.வெ.க. நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அள்ளிக் கொடுத்து அசத்தியிருக்கிறார். சேலை, பேன்ட், சட்டை, இனிப்புகள், பட்டாசுகள் என தீபாவளிப் பரிசுகளை வாரி வழங்கி, நிர்வாகிகளின் இல்லங்களை விட, அவர்களின் மனங்களை குளிரவைக்கப் பார்க்கிறார் சரவணன்.

இதையும் படியுங்க  "விஜய் செஞ்சது தப்பு.. இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? - தவெக-வின் தன்னிச்சை முடிவுகளை கிழித்தெறிந்த தேவசகாயம் IAS!"

பரிசுகளைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்கவில்லை. “அடுத்து வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல்களில் த.வெ.க.வின் வெற்றிக்காக எல்லாரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும்” என்று நிர்வாகிகளுக்கு அன்புக் கட்டளையும் போட்டிருக்கிறார். சரவணனின் இந்தத் திடீர் பாச மழையின் பின்னணியில் இருப்பது அக்மார்க் அரசியல் கணக்குதான். ‘இப்போதே அடிமட்ட நிர்வாகிகளைக் கவனித்து கையில் வைத்துக் கொண்டால், மாவட்டச் செயலாளர் பதவியை எளிதாக தட்டிப்பறித்து விடலாம்’ என்பதுதான் சரவணனின் மாஸ்டர் பிளான்.

தலைமை என்ன நினைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் சரவணன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “நான் எந்தக் கட்சிக்கு போனாலும் சீட்டும் பதவியும் வாங்கிவிடுவது என் ஹிஸ்டரி. த.வெ.க.விலும் எனக்குப் பதவி நிச்சயம்” என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் காலரைத் தூக்கிவிட்டு கெத்து காட்டுகிறாராம் டாக்டர்.

கட்சியில் பல வருடங்களாக உழைத்தவர்களை ஓரம் கட்டிவிட்டு, நேற்று வந்தவர் தீபாவளிப் பரிசுகளைக் கொடுத்து பதவியைப் பிடிக்கப் பார்க்கிறாரே என்று த.வெ.க.வின் சீனியர்கள் இப்போதே முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். ‘பரிசு மழையை’ நம்பி விஜய் சரவணனுக்குப் பதவியைக் கொடுப்பாரா? அல்லது சரவணனின் இந்த அரசியல் கணக்கு ‘புஸ்வானம்’ ஆகுமா?

இதையும் படியுங்க  இதை யாரும் எதிர்பார்க்கலையே.. மு.க.ஸ்டாலினுக்கு திடீர் சர்ப்ரைஸ்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *