Anil Reddy

தென்னிந்திய அரசியலின் மிக முக்கியமான ஆளுமைகள் பலர் கலந்துகொள்ள, ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகளின் பிரம்மாண்டத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும்விஜய், அனில் ரெட்டியின் நெருங்கிய உறவினரான ஒய்.எஸ். ஜெகன், தெலுங்கானாவின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ஆர் உள்ளிட்ட, தென்னிந்தியாவின் மூன்று முக்கிய மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தத் திருமண விழாவில் பங்கேற்றனர்.

நேற்று இரவு அனைவரது கவனத்தையும் ஈர்த்த விஷயம், விஜய், ஜெகன், கே.டி.ஆர் ஆகிய மூவருக்கும் இடையே நிலவிய இணக்கமான சூழல்தான். நிகழ்ச்சி முழுவதும் அவர்கள் மூவரும் உற்சாகமாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர்.

தங்கள் மகளின் திருமணத்திற்குத் தென்னிந்திய அரசியலின் இவ்வளவு பெரிய ஆளுநர்களை வரவழைத்த அனில் ரெட்டி யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து மக்கள் இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அனில் ரெட்டி, ஒய்.எஸ். ஜெகனின் நெருங்கிய உறவினர். இவர் வெளிநாடுகளில் செயல்படும் பல சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமின்றி, ஜெகனின் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே அவருடன் பயணித்து வருபவர். ஆந்திரப் பிரதேச மதுபான ஊழல் வழக்கிலும், நிதி தொடர்பான விசாரணைகளில் இவருடைய பெயர் முக்கியக் குற்றவாளியாக அடிபடுகிறது.

இதையும் படியுங்க  கூரை ஏறி கோழி பிடிக்காத திமுக..! ஒரே வாரத்தில் விஜய் மீது அபாண்டப்பழி..! அறிவாலயத்தின் அரசியல் தந்திரம்..!

சுரங்கத் துறை, ஆந்திரப் பிரதேச மதுபான ஊழல் என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும், ஜெகனுடனான நெருக்கம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், அவரது ஆட்சியுடன் கொண்டுள்ள உயர்மட்டத் தொடர்புகள் காரணமாக, தென்னிந்திய அரசியலில் திரைக்குப் பின்னால் இயங்கும் ஒரு முக்கிய நபராக அவர் உருவெடுத்துள்ளார்.

தென்னிந்திய அரசியலில் மிக முக்கியமான செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக அனில் ரெட்டி மாறியுள்ளார். தொழிலதிபர் கௌதம் அதானியும் இந்தத் திருமண விழாவில் நீண்ட நேரம் செலவிட்டது, அனில் ரெட்டியின் பரந்து விரிந்த செல்வாக்கையும் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *