VAO

வருவாய் நிர்வாகம் அறிவிப்புகள் 2026 கிராம நிர்வாக அலுவலர் பராமரிப்பிற்காக ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் ஆண்டு ஒன்றிற்கு 12, 000 ஆயிரம் என 12,646 கிராம நிர்வாக அலுவல பராமரிப்பிற்காக 15 கோடியே 17 லட்சத்து52 என தொடரும். 2026 நிதி ஆண்டிற்கான 8 கோடியே 85லட்சம் என செப்டம்பர் 26, 2026 முதல் மார்ச் 2027 வரை முழு அளவு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு தற்போது மொத்தம் 12646 கிராம நிர்வாக அலுவல பணிகள் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலமானது பொதுமக்களின் தேவைகளான பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா குறு சிறு விவசாயிகளுக்கான வருமான சான்று, இருப்பிட சான்று, சமூக சான்று, முதல் பட்டதாரி சான்று, சட்டப்பூர்வ வாரிசு சான்று போன்ற பல வகையான சான்றுகளை பெறுவதற்கு பொதுமக்கள் அன்றாடம் பெருமளவில் வந்து செல்வதால் அவர்களுக்கு குடிநீர் வசதி, அமர்விடம் மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான சாய்வு தள வசதிகளை ஏற்படுத்தவும், பராமரிப்பு தொகை தொகை செலவாக ஒரு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு 1000 வீதம் ஆண்டு தோறும் 12000 வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், இதற்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  வண்டலூரில் வெடித்த வாக்குவாதம்.. முதலமைச்சர் விஜய் பிறந்தநாளில் பரபரப்பு!

அந்த அடிப்படையில் மிக முக்கியமாக 1000 ரூபாய் என 2026 முதல் 2027 வரை 8 கோடியே 85,2,000 பணத்தை நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரையை ஏற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக்களின் தேவைகளை குறிப்பாக பலவகையான சான்று பெற வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமிட்டுமின்றி 2053 மாவட்ட நிர்வாகம், 97 பணியமைப்பு மாநில செலவினங்கள், ரயத்துவாரி கிராமம், 305 அலுவலக செலவுகள் ஒன்பது கிராம நிர்வாக அலுவலக பராமரிப்பு என மொத்தமாக குறிப்பிட்டு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *