Vijay

த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே, முதல்வர் விஜய்யின் நிழலாகவும், அரசின் ‘பவர்ஃபுல்’ ஆலோசகராகவும் வலம் வருபவர் விஷ்ணு ரெட்டி. கல்லூரி காலத்து உயிர் நண்பர் என்பதால், முதல்வர் விஜய்யின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பெற்று, அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் விஷ்ணு ரெட்டி மீது இப்போது ஆளும் கட்சிக்குள்ளேயே பலத்த புகார்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

விஷயம் இதுதான்… தமிழக அரசைப் பொறுத்தவரை தினமும் பல கோடிகள் புரளும் முக்கியத் துறைகள் என்றால் அது கனிமவளமும், ‘டாஸ்மாக்’கும் தான். இந்தத் துறைகளைக் குறிவைத்து, திரைமறைவுப் பேச்சுகள் அனல் பறந்திருக்கின்றன.

மதுபான கொள்முதல் டீல்
ஒரு பெரிய மதுபான நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ‘டெண்டர்’ விவகாரத்தில், விஷ்ணு ரெட்டி மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, கடந்த திமுக ஆட்சியில் மணல், மண் உள்ளிட்ட கனிமவளங்களை அள்ளி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புதுக்கோட்டை ‘புள்ளிகள்’ சிலரை, இந்த த.வெ.க. ஆட்சி வந்ததும் ஓரங்கட்டி வைத்திருந்தனர். ஆனால், விஷ்ணு ரெட்டியின் ஆதரவோடு அந்த பழைய புள்ளிகள் மீண்டும் கனிமவளத் துறையில் தலையெடுக்கத் தொடங்கியிருப்பதாக விஜய்க்கே புகார்கள் சென்றுள்ளது.

இதையும் படியுங்க  Legally, both are thought of infringements on mental property
vishnu reddy

விஜய்யின் ஆக்‌ஷன்
தன் மீது மக்கள் வைத்திருக்கும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், தனக்கு நெருக்கமானவர்களே இப்படிப்பட்ட விவகாரங்களில் ஈடுபடுவதை முதல்வர் விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் அவரது காதுகளுக்குச் சென்றதும், விஜய் கடும் அப்செட் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக, தனது உயிர் நண்பர் என்றும் பார்க்காமல் விஷ்ணு ரெட்டிக்கு “கனிமவளம் மற்றும் மதுபான கொள்முதல் விவகாரங்களில் இனி எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது” என ஸ்ட்ரிக்ட்டாக தடை போட்டுள்ளார். அடுத்த கட்டமாக, டாஸ்மாக் மற்றும் கனிமவளத் துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட முதல்வர், “மதுபானங்கள் கொள்முதல் செய்வதில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எந்தவொரு முக்கியப் புள்ளியின் சிபாரிசுகளையும், அழுத்தங்களையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளாத சொல்கிறார்கள் மேலிட விவகாரம் அறிந்தவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *