Deetta saravanan

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், த.வெ.க. தலைவர், முதல்வர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசி, கம்பி எண்ணிவிட்டு இப்போதுதான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் வேலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரான ‘டீட்டா’ சரவணன். ஆனால், அதற்குப் பின்னால் வேலூர் தி.மு.க.வுக்குள் நடந்துள்ள உள்குத்து அரசியல் தான் இப்போது ஹாட் டாபிக்.

உதயநிதி போட்ட உத்தரவு
சரவணன் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே, வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை அவசரமாகத் தொடர்புகொண்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி, “சரவணனுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்யுங்க… அவரை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடக் கூடாது!” என்று கறாராக உத்தரவு போட்டிருந்தார். ஆனால், ஜாமீன், சட்ட உதவிகளுக்காக சரவணன் கட்சி நிர்வாகிகளுக்கு போன் போட்டபோதுதான் அசல் ‘ஆப்பு’ காத்திருந்தது. அவர் அவசர அவசரமாக அடித்த போன்கள் எதையுமே எந்த ஒரு மாவட்ட நிர்வாகியும் எடுக்கவே இல்லை. உதவிக் கேட்டுப் போனவரை மொத்தமாக கைகழுவி நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர் உடன்பிறப்புகள்.

இதையும் படியுங்க  தெருக்களில் சாதிப்பெயர் நீக்கம் இப்போதைக்கு இல்லையா? உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

பழிதீர்த்த வேலூர் தி.மு.க
தி.மு.க. நிர்வாகிகள் ஏன் சரவணனை இப்படித் துரோகம் செய்து கைகழுவினார்கள் என்பதற்குப் பின்னணியில் ஒரு பெரிய ப்ளாஷ்பேக் இருக்கிறது. சரவணன் ஆரம்பத்தில் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராக வலம் வந்தவர். அதன் பிறகு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் தனிப்பட்ட சிபாரிசைப் பிடித்து, கட்சியில் முக்கியப் பதவி, கவுன்சிலர் சீட் என எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்தார்.


அன்பில் மகேஷ், உதயநிதியின் செல்வாக்கு தனக்கு பின்னால் இருக்கிறது என்ற மமதையில், வேலூர் மாவட்டத்தின் சீனியர் கட்சி நிர்வாகிகளை துளிக்கூட மதிக்காமல், தன்னிச்சையாக ஆட்டம் போட்டு வந்திருக்கிறார் சரவணன். “அப்படியே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள், சமயம் பார்த்து சரவணனுக்கு சரியான ஆப்பு வைத்து பழிதீர்த்துவிட்டார்கள்!” என்று வேலூர் திமுகவினர் பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *